வரலாற்றை மாற்றி எழுதிய இந்தியா.. 5 பேட்ஸ்மேன்கள் அதிரடி சாதனை.. இங்கிலாந்துக்கு எதிராக முதல்முறை சம்பவம்!
ரோகித் சர்மா 103 ரன்களிலும், சுப்மன் கில் 110 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல் - சர்பராஸ் கான் இருவரும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் சுழலில் சிக்கியதால், வெறும் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
அதனை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடிய நிலையில், 135 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையில், இந்திய அணியின் அடுத்த ஆட்டம் தொடங்கியது.
ரோகித் சர்மா 103 ரன்களிலும், சுப்மன் கில் 110 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல் - சர்பராஸ் கான் இருவரும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இளம் வீரர் சர்பராஸ் கான் 56 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 400 ரன்களை கடந்தது. பின்னர் அவரும் 65 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த நிலையில், இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் அனைவரும் அரைசதம் கடந்துள்ளனர்.
இதன் மூலமாக 92 வருட இந்திய டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் 5 பேட்ஸ்மேன்கள் அனைவரும் அரைசதம் கடப்பது இதுவே முதல்முறை என்று பார்க்கப்படுகின்றது.
அத்துடன், இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் 15 ஆண்டுகளுக்கு பின் அரைசதம் விளாசி இருக்கிறார்கள்.
1998ல் கொல்கத்தாவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டி, 1999ல் மொஹாலியில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி, 2009ஆம் ஆண்டு மும்பையில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டி ஆகியவற்றில் இந்திய 5 பேட்ஸ்மேன்கள் அரைசதம் விளாசி இருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |