ரோஹித் சர்மாவை சீண்டிய இளம் வீரர்.. டிராவிட் செய்த காரியம்... உலகக்கோப்பை வாய்ப்பு அவ்வளவுதான்!
கேப்டன் எடுக்கும் முடிவை எதிர்த்து நடந்து கொள்ளம் வீரர் அணியில் நீடிப்பது கடினம். அதிலும் இஷான் கிஷன் தாமாக அணியில் இருந்து விலகியும் இருக்கிறார்.
இந்திய அணியில் தன்னை மாற்று வீரராக வைத்து இருப்பது தொடர்பில் கேள்வி கேட்ட இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷனை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கட்டம் கட்டி வைத்திருப்பதாக வெளியான தகவல் தற்போது பேசு பொருளாக ஆகி உள்ளது.
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படவில்லை.
தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் மாற்று விக்கெட் கீப்பராக அவர் தேர்வு செய்யப்பட்ட அவர் தற்போது அணியில் இடம் பெறவில்லை.
இதனையடுத்து தான் அவரை குறி வைத்து ஒதுக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒருநாள் அணி, டி20 அணி மற்றும் டெஸ்ட் அணி என மூன்று அணிகளிலும் வாய்ப்பு பெற்று வந்த இஷான் கிஷன் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளார்.
இந்த நிலையில், ராகுல் டிராவிட் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் குறித்த கேள்விக்கு கூறிய பதிலை பார்த்தால் இந்த தகவல் உறுதியாகும் வகையில் உள்ளது.
கடந்த ஓராண்டாக அணியில் மாற்று வீரராக இடம் பெற்று வந்த இஷான் கிஷனுக்கு மற்ற வீரர்கள் ஓய்வில் இருக்கும் போதும், காயத்தில் இருக்கும் போதும் மட்டுமே போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டிகளிலும் களமிறங்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்காது என தெரிந்த உடன் தான் மன சோர்வின் காரணமாக விலகுவதாக கூறி அணியில் இருந்து விலகினார்.
இளம் வீரரை தனியாக அழைத்து ரோஹித் சர்மா பேச்சு.. ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு உறுதியானது!
இந்த விவகாரத்தில் இஷான் கிஷன் தனக்கு போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த நிலையில் விலகியது, ரோஹித் சர்மா மற்றும் டிராவிட் முடிவை எதிர்த்து அவர் நடந்து கொண்டதால் என்று கூறப்படுகின்றது.
கேப்டன் எடுக்கும் முடிவை எதிர்த்து நடந்து கொள்ளம் வீரர் அணியில் நீடிப்பது கடினம். அதிலும் இஷான் கிஷன் தாமாக அணியில் இருந்து விலகியும் இருக்கிறார்.
இந்த நிலையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல் டி20 போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பயிற்சியாளர் டிராவிட் இடம், இஷான் கிஷன் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த டிராவிட், "இஷான் கிஷன் இன்னும் தான் அணியில் ஆட தயார் என கூறவில்லை. அவராக ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார். அவர் மீண்டும் போட்டிகளில் ஆட தயாராகும் போது அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடி தான் அணியில் ஆட தயாராக இருப்பதை உறுதி செய்வார். வெளியில் செல்வது உங்கள் முடிவு. அணிக்குள் வருவது எங்கள் முடிவு" என கூறினார்.
இந்த இடத்தில் டிராவிட் கூறிய அந்த கடைசி வரிகள் தான் முக்கியமானது. அதன் அர்த்தம், இஷான் கிஷன் வெளியேறினால் அது அவர் விருப்பம். ஆனால், அவர் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் நாங்கள் தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்பதே.
ராகுல் டிராவிட் பேசி இரு நாட்கள் ஆன நிலையில் இஷான் கிஷன் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. அடுத்து அவர் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா? என்பதும் கேள்வியே.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |