ஆண்டின் கடைசி வாரம்: டிசம்பர் 28 முதல் ஜனவரி 3 வரை இந்த 3 ராசிகளுக்கு சிறப்பான அதிர்ஷ்டம்!

2025 ஆம் ஆண்டின் கடைசி வாரமான டிசம்பர் 28 முதல் ஜனவரி 3 வரையான காலகட்டத்தில் சில ராசிகளுக்கு குறிப்பாக அதிர்ஷ்டம் பூத்திருக்கிறது.

ஆண்டின் கடைசி வாரம்: டிசம்பர் 28 முதல் ஜனவரி 3 வரை இந்த 3 ராசிகளுக்கு சிறப்பான அதிர்ஷ்டம்!

ஜோதிடம் மூலம் நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நல்லது, கெட்டது என அனைத்தும் கிரக நிலைகளை பொறுத்தது. 2025 ஆம் ஆண்டின் கடைசி வாரமான டிசம்பர் 28 முதல் ஜனவரி 3 வரையான காலகட்டத்தில் சில ராசிகளுக்கு குறிப்பாக அதிர்ஷ்டம் பூத்திருக்கிறது. இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

மேஷம்: இந்த வாரம் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். பணியிடத்தில் பிரச்சனைகளும், தொழிலில் ஏற்ற இறக்கங்களும் காணப்படும். வார நடுப்பகுதியில் சிறிது வளர்ச்சி காணலாம். எனினும், முதலீடுகளில் கவனம் தேவை. மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். உறவுகளில் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

ரிஷபம்: சாதகமான இந்த வாரம் வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சியைத் தரும். நீண்ட தூரப் பயணங்கள் இனிமையாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் வாய்ப்புண்டு. புதிய முதலீடுகளுக்கு இது நல்ல நேரம். துணையுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும்.

மிதுனம்: வாரத்தின் முதல் பாதி நன்றாகவும், பிற்பாதி சவாலாகவும் இருக்கும். அழுத்தத்தில் எடுக்கும் முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியம் சற்று கவலைக்குரியதாக இருக்கும். உறவுகளில் பொறுமையும் விவேகமும் தேவை.

கடகம்: மிகவும் அதிர்ஷ்டமான இந்த வாரம் தொழில், வேலை, நிதி என அனைத்திலும் முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு, சொத்து விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பெற்றோர் மற்றும் துணையின் ஆதரவு உண்டு.

சிம்மம்: சிறப்பான இந்த வாரம் உங்கள் கடின உழைப்புக்கான பலனைத் தரும். வெளிநாட்டு தொடர்பு வணிகத்தில் லாபம். நிதி நிலை வலுவடையும். மாணவர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி: சவால்கள் நிறைந்த வாரம். நிதி மற்றும் உறவுகளில் பிரச்சனைகள் ஏற்படலாம். அதிக செலவுகள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளலாம். பணிவுடன் நடந்து உறவுகளைப் பராமரிக்கவும்.

துலாம்: பிரச்சனைகள் தீரும் வாரம். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இறக்குமதி-ஏற்றுமதித் தொழிலில் பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு கடின உழைப்பு வெற்றி தரும். காதல் உறவுகள் ஆழமாகும்.

விருச்சிகம்: பரபரப்பான மற்றும் செலவு அதிகமான வாரம். உடல் சோர்வு மற்றும் நிதி சிக்கல்கள் ஏற்படலாம். கடன் வழங்குவதில் எச்சரிக்கை தேவை. காதல் உறவுகளில் பொறுமை முக்கியம்.

தனுசு: தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் நல்ல ஆதரவு கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்களை அமைதியாகத் தீர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

மகரம்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரம். தொழிலில் மந்தநிலை நிலவலாம். முதலீடுகளுக்கு முன் நல்லவர்களின் ஆலோசனை பெறவும். பயணங்கள் மிதமான பலன் தரும். உறவுகள் சுமாராக இருக்கும்.

கும்பம்: மிகச் சிறப்பான வாரம். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம். நிதி நிலை வலுபெறும். உடன்பிறப்புகள் மற்றும் காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

மீனம்: கடின உழைப்பின் பலனை அனுபவிக்கும் வாரம். பணியிடத்தில் புதிய பொறுப்புகள், தொழிலில் லாபம். சொத்து வாங்குவதற்கு நல்ல நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெற்றோர் ஆதரவு உண்டு.

(பொறுப்புத் துறப்பு: இந்த ராசிபலன் தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் பொதுவான ஜோதிடக் கணிப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை தனிப்பட்ட ஜாதகப் பகுப்பாய்வு அல்ல. எந்த முடிவையும் எடுக்கும் முன், தகுதிவாய்ந்த ஜோதிடரை அணுகவும்.)