அணியை விட்டு கோலியை அனுப்ப பிசிசிஐ முடிவு.. அதிருப்தியால் அதிரடி முடிவு!
யாரும் சரிவராத நிலையில், மீண்டும் ரோஹித் சர்மாவையே கேப்டனாக இருக்குமாறு கேட்டுக் கொண்டது.
இந்திய அணியின் மூத்த வீரருமான விராட் கோலியை டி20 அணியில் இருந்து நிரந்தரமாக நீக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் உலகக்கோப்பைக்கு பின் நடந்த கூட்டத்தில் ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோர் முன்னிலையில் இந்த முடிவை பிசிசிஐ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
2022க்கு பின்னர் இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு இடம் அளிக்கப்படவில்லை. இன்னும் ஆறு மாதங்களில் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக டி20 அணியின் கேப்டன் யார் என்ற முடிவை எடுத்துள்ளது.
பல்வேறு டி20 தொடர்களில் பல வீரர்களை கேப்டன்களாக நியமித்து இருந்தது பிசிசிஐ. ஆனால், யாரும் சரிவராத நிலையில், மீண்டும் ரோஹித் சர்மாவையே கேப்டனாக இருக்குமாறு கேட்டுக் கொண்டது.
ரோஹித் சர்மா டி20 அணிக்கு திரும்ப இருப்பதால் அவருடன் விராட் கோலியும் அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் நம்பிய நிலையில் அதிரடியாக விராட் கோலியை அணியில் இருந்தே நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்தார். ஆனால், அவரது ஸ்ட்ரைக் ரேட் 90 ஆக இருந்தது.
அதே தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்கள் அனைவரும் 100க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தனர். விராட் கோலி மட்டுமே குறைவான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார் என்பதை சுட்டிக் காட்டி அவரை டி20 அணியில் இருந்து நீக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அணி நிர்வாகம் தன்னை விக்கெட் இழக்காமல் நிதான ஆட்டம் ஆடுமாறு கேட்டுக் கொண்டதால் நிதானமாக ஆடினேன் என 49வது சதம் அடித்த பின் கோலி பேசினார்.
அணி நிர்வாகமே நிதான ஆட்டம் ஆடுமாறு கூறி விட்டு, பின் பிசிசிஐ அதை காரணம் காட்டி நீக்க உள்ளதாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |