விராட் கோலிக்கு தடை? பிசிசிஐ எடுத்துள்ள தீர்மானம்... என்ன காரணம்? 

நடப்பு ஐபிஎல் சீசனில், விராட் கோலி தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு, அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில், தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

விராட் கோலிக்கு தடை? பிசிசிஐ எடுத்துள்ள தீர்மானம்... என்ன காரணம்? 

நடப்பு ஐபிஎல் சீசனில், விராட் கோலி தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு, அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில், தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

இதுவரை 8 போட்டிகளில் களமிறங்கி 63.17 சராசரியில் 379 ரன்களை அடித்துள்ளார். டிராவிஸ் ஹெட் (324), ரியான் பராக் (318) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஆர்சிபி அணி கடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக விளையாடியபோது, கோலி நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கொல்கத்தா அணிக்கு எதிராக கோலி பேட்டிங் செய்தபோது, ஹர்ஷித் ராணா, கோலியின் இடுப்பு அளவுக்கு புல்டாஸ் பால் வீச, அதனை கோலி தடுமாற்றத்துடன் ஆடி, பௌலரிடமே கேட்ச் ஆனார். இதனை, கோலி ரிவியூ செய்தபோது மூன்றாம் நடுவர் நோ-பால் என அறிவிக்கவில்லை.

இதனால், கடும் அதிருப்தியடைந்த விராட் கோலி, களத்திலேயே ஆவேசமாக பேச ஆரம்பித்தார். குறிப்பாக, களத்தில் இருந்த நடுவர்களிடம் சென்று, ஏதோ ஆக்ரோஷமாக பேசிவிட்டு சென்றார். இதுதான் தற்போது பெரிய விஷயமாக மாறி உள்ளது.

களத்தில் கோலி ஆக்‌ரோஷமாக நடந்துகொண்ட நிலையில், இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகத்திடம் நடுவர்கள் புகார் செய்துள்ளனர். அப்போது, இதற்கு சரியான தண்டனை கொடுக்கவில்லை என்றால், மற்ற வீரர்களும் இதேபோல்தான் நடந்துகொள்வார்கள் என நடுவர்கள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், கோலியின் செயல்பாடு குறித்து, இன்று காலை பிசிசிஐ மீட்டிங் நடைபெற்றது. அப்போது, கோலி மீண்டும் இதேபோல் ஒருமுறை நடந்துகொண்டால், 2 ஐபிஎல் போட்டிகளில் தடைவிதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்சிபி அணி, இதுவரை 8 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. இனி வரும் போட்டிகளில் அனைத்திலும் வென்றாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில்தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலை  உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...