மகள் இறந்த சோகத்திலும் கடமை தவறாத விஜய் ஆண்டனி... பட ப்ரொமோஷனில் பங்கேற்பு

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி. தற்போது ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக கலைஞராக வலம் வருகிறார். 

மகள் இறந்த சோகத்திலும் கடமை தவறாத விஜய் ஆண்டனி... பட ப்ரொமோஷனில் பங்கேற்பு

விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் திரையுலகில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து மகள் மறைவு குறித்து விஜய் ஆண்டனியும் உருக்கமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், மகள் இறந்த துக்கத்திலும் தான் நடித்த ரத்தம் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி. தற்போது ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக கலைஞராக வலம் வருகிறார். 

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக பிச்சைக்காரன் 2 வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 6ம் தேதி ரத்தம் திரைப்படம் வெளியாகவுள்ளது. சி.எஸ் அமுதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இதனிடையே, விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார். சென்னையில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்த மீரா, தீவிரமான மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. 

அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், ற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

விஜய் ஆண்டனி, அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் மீராவின் மறைவால் சோகத்தில் உறைந்திருந்தனர். இந்நிலையில், மகள் உயிரிழந்த ஒரே வாரத்தில் தான் நடித்த ரத்தம் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டார். 

இயக்குநர் சி.எஸ் அமுதனுடன் இணைந்து பேட்டியும் கொடுத்த விஜய் ஆண்டனி, ரத்தம் படத்தின் ப்ரொமோஷனிலும் பங்கேற்றார். விஜய் ஆண்டனியின் இந்த முதிர்ச்சியை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

முக்கியமாக, ரத்தம் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் தனது இளைய மகளுடன் விஜய் ஆண்டனி கலந்துகொண்டது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மூத்த மகள் மீராவை பறிகொடுத்த விஜய் ஆண்டனி, அதிலிருந்து விரைவாக மீண்டு வருவதுடன், தனது இளைய மகளையும் பொதுநிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

முன்னதாக மகள் மீராவின் மறைவு குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கையில், "மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு சென்றுள்ளாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். 

நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்" என குறிப்பிட்டிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp