கணவரால் எனக்கு ரொம்ப கஷ்டம்.. ஆஸ்திரேலிய அணி வீரரின் மனைவி கவலை!
உலகக்கோப்பைக்கு பின் தன் கணவர் குறித்து அவரின் மனைவி ஜெஸிக்கா ஊடகங்களுக்கு மனந்திறந்துள்ளார்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த நிலையில் உலகக்கோப்பைக்கு பின் தன் கணவர் குறித்து அவரின் மனைவி ஜெஸிக்கா ஊடகங்களுக்கு மனந்திறந்துள்ளார்.
பிறந்தநாள் விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்களுக்கு தன் கணவர் இல்லாமல் தனியாக செல்வது கடினமாக உள்ளதாக கூறிய அவர், ட்ராவிஸ் பிறந்தநாள் விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்களுக்கு வர மாட்டார். நானே தனியாக அங்கே செல்லுவேன் இதுதான் கிரிக்கெட்டில் உள்ள நிலை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ட்ராவிஸ் பெரும்பாலான நாட்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தாலும் குடும்பத்திற்கு தேவையான விஷயங்களை செய்து விடுவார் என்றும் ஜெஸிக்கா கூறியுள்ளார்.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ட்ராவிஸ் ஹெட் அவரது மனைவி குறித்து மூக ஊடக பக்கங்களில் வெளியான மோசமான கருத்து தொடர்பில் பேசிய அவர், மக்கள் மிகவும் ஆதரவாகவும் அன்பாகவும் இருக்கிறார்கள். ட்ரோல்களுக்காக நான் என் ஆற்றலை வீணாக்க விரும்பவில்லை. இந்தியா ஒரு அற்புதமான நாடு. ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும்போது அங்கே வித்தியாசமான வாழ்க்கை இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |