இன்றைய ராசிபலன் | Today Rasi Palan in Tamil - 21 ஜூலை 2025 | ColomboTamil
21 ஜூலை 2025 - இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் தமிழில். உங்கள் நாளை எப்படி எதிர்பார்க்கலாம் என்பதை ColomboTamil இல் தெரிந்துகொள்ளுங்கள்.

மேஷம்
ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசிய செலவினை மட்டும் பாருங்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் உண்டு.
ரிஷபம்
திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.
மிதுனம்
பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். கலைத்துறையினருக்கு காரியத்தடைகள் ஏற்படும். படம் தேர்வு செய்யும் போது மிகுந்த கவனம் தேவை.
கடகம்
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். புது பங்குதாரர்களால் உற்சாகமடைவீர்கள். நீண்ட கால கனவு நனவாகும். மாணவர்களுக்கு தேர்வினைப் பற்றிய அச்சம் தீரும்.
சிம்மம்
வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவியும் கிட்டும். அரசு தொடர்பான புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும்.
கன்னி
எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புதுவீடு வாங்குவீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கூடுமானவரை கவனமாக இருக்க வேண்டும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும்.
துலாம்
இன்று சந்திராஷ்டமம் என்பதாலல் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. ஆதலால், யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொதுவாக இன்று அமைதி காப்பது நல்லது. இறைவனை மட்டும் வழிபடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்
வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, நீங்கும்.
தனுசு
உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். செலவு செய்வதில் கவனம் தேவை.சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
மகரம்
தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகஸ்தர்களுக்கு தங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள்.
கும்பம்
மறைமுக அவமானங்களும் வந்து போகும். உடல் நிலை சீராகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது ஒரு பயம் வரும். அதை சமாளிக்கும் வழி கிடைக்கும். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். நண்பர்கள் உதவுவர். புதிய தொழில் துவங்குவீர்கள்.
மீனம்
கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உணவில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும்.