இந்தியா-பாகிஸ்தான் டிக்கெட் 1.86 கோடி ரூபாய்க்கு விற்பனை... அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!

ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நடத்தும் டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

இந்தியா-பாகிஸ்தான் டிக்கெட் 1.86 கோடி ரூபாய்க்கு விற்பனை... அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!

ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நடத்தும் டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

வருகின்ற ஜூன் 5ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்துடன் மோத உள்ளதுடன், ஜூன் 9ம் தேதி இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.

அத்துடன், ஜூன் 12ம் தேதி இந்திய அணி, மூன்றாவது போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளும் நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. 

இந்தநிலையில், உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி  கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கியது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால், தற்போது அனைத்து போட்டிகளின் டிக்கெட்களும் ஒரு சில டிக்கெட் விற்பனை தளங்களில் மறுவிற்பனை செய்யப்படுவதாகவும், இந்த டிக்கெட்கள் stubhub மற்றும் seatgeek ஆகிய டிக்கெட் விற்பனை தளங்களில் கிடைத்து வருவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இதில், மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் இந்திய அணியின் இரண்டு போட்டிகளுக்கான ஒரு டிக்கெட் விலை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இதில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான டிக்கெட் விலை ரூ. 1.89 கோடிக்கு சென்றுள்ளது. அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட போட்டிகளின் அனைத்து டிக்கெட்டுகளும் அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன்படி, ஒரு டிக்கெட்டின் விலை 6 டாலராக இருந்த நிலையில், இப்போது ப்ளாக் மார்க்கெட்டில் 400 டாலருக்கு (சுமார் ரூ.33,148) கிடைக்கிறது. 

பிரீமியம் டிக்கெட்டின் விலை 400 டாலராக இருந்த நிலையில், இப்போது ப்ளாக் மார்க்கெட்டில் 40,000 டாலர்களுக்கு (சுமார் 33 லட்சம் ரூபாய்) கிடைக்கிறது. 

முதல் கட்ட டிக்கெட் விற்பனையின்போது, ஒரு டிக்கெட்டுகளின் குறைந்தபட்ச விலை ரூ. 497 ஆகும். அதேநேரத்தில் ஒரு விக்கெட்டின் அதிகபட்ச விலை ரூ. 33, 148 (வரி இல்லாமல்) ஆகும். இது தவிர கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது. 

இருப்பினும், ஐசிசியிடம் வாங்கப்பட்ட விஜபி டிக்கெட் ஒன்று மற்றொரு டிக்கெட் விற்பனை தளங்களில் சுமார் ரூ.33.15 லட்சமாக இருந்தது. வரி உள்ளிட்ட கட்டணத்தை சேர்த்தால் ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 41.44 லட்சத்தை தொட்டுள்ளது. 

அதே நேரத்தில், StubHubல் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான மலிவான டிக்கெட் ரூ. 1.04 லட்சமும், SeatGeek இல் மிகவும் விலையுயர்ந்த டிக்கெட் ரூ.1.86 கோடியாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த டிக்கெட் விற்பனை தளங்களில் டிக்கெட்டுடன் கூடுதல் கட்டணங்களும் அடங்கும். கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான மிக விலையுயர்ந்த டிக்கெட் விலையே  ரூ. 57.15 லட்சமாகதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...