UK-யில் 16 கிளைகளை மூடிய TGI Fridays: 456 ஊழியர்கள் வேலை இழப்பு
UK-யில் TGI Fridays உணவகங்களின் செயல்பாடுகளை நிர்வகித்து வந்த Liberty Bar and Restaurant Group நிறுவனத்திற்கு, நிர்வாக ஆலோசனை நிறுவனமான Interpath, செவ்வாய்க்கிழமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டது.
அமெரிக்க கேஷுவல் டைனிங் உணவக சங்கிலியான TGI Fridays, இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த தனது 16 கிளைகளை மூடியுள்ளது. இதன் காரணமாக 456 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இருப்பினும், மீதமுள்ள 33 உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
UK-யில் TGI Fridays உணவகங்களின் செயல்பாடுகளை நிர்வகித்து வந்த Liberty Bar and Restaurant Group நிறுவனத்திற்கு, நிர்வாக ஆலோசனை நிறுவனமான Interpath, செவ்வாய்க்கிழமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டது.
இதையடுத்து, TGI Fridays-ன் UK வணிகமும் அதன் சொத்துகளும் உடனடியாக, உலகளாவிய TGI Fridays பிராண்டை நிர்வகிக்கும் Sugarloaf நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டன.
இந்த மீட்பு ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 1,384 வேலைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய TGI Fridays நிறுவனத்தின் தலைவர் பில் பிராட், “UK-யில் TGI Fridays-ன் நீண்டகால எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியமான வழிகளையும் ஆராய்ந்து வந்தோம். இந்த ஒப்பந்தம் நிறுவனத்திற்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்றும், வேலைகளை காக்கவும், வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைக்கவும் உதவும் என்றும் நம்புகிறோம்” என்று கூறினார்.
Interpath நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், இணை நிர்வாகியுமான ரயன் கிராண்ட், “UK முழுவதும் அறியப்பட்ட இந்த பிராண்டு தொடர்ந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்ததில் மகிழ்ச்சி. விருந்தோம்பல் துறை சமீப காலங்களில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும், இது TGI Fridays நிறுவனத்தின் மீட்பு முயற்சிகளில் ஒரு முக்கியமான திருப்பமாகும். இனி நிறுவனம் நிலையான அடித்தளத்தின் மீது முன்னேற முடியும்” என தெரிவித்தார்.
