எங்கள் அணியின் இதெல்லாம் பலவீனம்... வெளிப்படையாக உண்மையை ஒப்பு கொண்ட ருதுராஜ்
சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வெளிப்படையாக உண்மையை ஒப்பு கொண்டுள்ளார்.
 
                                நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு போட்டியில் விளையாடி இரண்டில் வெற்றி இரண்டு தோல்வி என புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகள் உடன் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வெளிப்படையாக உண்மையை ஒப்பு கொண்டுள்ளார்.
ஹைதராபாத் ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்தது. கருப்பு மணலை பயன்படுத்தி ஆடுகளத்தை தயார் செய்திருக்கிறார்கள். எனவே இந்த ஆடுகளம் தோய்வாக தான் இருக்கும் என்று முன்பே நாங்கள் கணித்து விட்டோம்.
 
            
ஹைதராபாத் அணி கடைசி பத்து ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி ரன்கள் அடிக்கும் வேகத்தை கட்டுப்படுத்தி விட்டார்கள். நாங்கள் கடைசி ஐந்து ஓவர்களில் சரியாக விளையாடவில்லை.
முதல் 10 ஓவரில் 80 ரன்களுக்கு மேல் இருந்தோம். ஆனால் அதன் பிறகு சன்ரைசர்ஸ் வீரர்கள் பிரமாதமாக பந்து வீசினார்கள். அந்தக் கட்டத்தில் நாங்கள் அதிக ரன்கள் சேர்க்க தவறிவிட்டோம்.
அத்துடன், நாங்கள் பந்து வீசும் போது பவர் பிளேவில் சொதப்பிவிட்டோம். குறிப்பாக ஒரு ஓவரில் அதிக ரன்கள் சென்று விட்டது. இந்த ஆடுகளத்தில் நாங்கள் 170 -175 ரன்கள் அடித்திருக்க வேண்டும்.
இந்த ரன்களை அடித்து நாங்கள் பவர் பிளேவில் சரியாக பந்து வீசி இருந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கலாம். நாங்கள் ஆரம்ப கட்டத்தில் ஒரு முக்கியமான கேட்சையும் மிஸ் செய்து விட்டோம் என்று ருதுராஜ் கூறினார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






