பிரான்சில் பாலியல் குற்றச்சாட்டில் தோடப்பட்ட இலங்கைத் தமிழர் இங்கிலாந்தில் கைது

பிரான்சில் ஒரு பெண்ணுக்கு எதிராக தவறான நடத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்குள்ளான 30 வயதான இலங்கைத் தமிழர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்சில் பாலியல் குற்றச்சாட்டில் தோடப்பட்ட இலங்கைத் தமிழர் இங்கிலாந்தில் கைது

பிரான்சில் ஒரு பெண்ணுக்கு எதிராக தவறான நடத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்குள்ளான 30 வயதான இலங்கைத் தமிழர் ஒருவர், இங்கிலாந்தின் லிவர்பூல் நகர மையத்தில் இருந்து நாடுகடத்தல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர் குறித்து பிரான்ஸ் சட்ட அமலாக்க அமைப்புகள் தேடுதல் அறிவித்திருந்ததாக அறியப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட அவர், பின்னர் லண்டனிலுள்ள நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போது, நாடுகடத்தல் செயல்முறை முடியும் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கிற்கான முழுமையான நாடுகடத்தல் விசாரணை 2026 மார்ச் 26ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.