குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் எளிய ஆரோக்கிய வழிகள்

நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதற்கு விட்டமின் மாத்திரைகளைக் காட்டிலும், சத்தான மற்றும் இயற்கையான உணவுகளே சிறந்ததாகும்.

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் எளிய ஆரோக்கிய வழிகள்

குளிர்காலம் தொடங்கியவுடன் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகரிப்பது வழக்கம். இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என இந்த ஆய்வுக் கட்டுரை விளக்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதற்கு விட்டமின் மாத்திரைகளைக் காட்டிலும், சத்தான மற்றும் இயற்கையான உணவுகளே சிறந்ததாகும். குறிப்பாக Vitamin D மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கின்றன.

குளிர்காலத்தில் வறண்ட காற்று நிலவுவதால் வைரஸ்கள் எளிதாகப் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, வீடுகளில் தேவையான அளவு ஈரப்பதத்தை பராமரிப்பது காய்ச்சல் மற்றும் தொற்றுகள் பரவுவதை குறைக்க உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தரமான தூக்கம் அவசியம். தூக்கக் குறைபாடு ஏற்பட்டால் உடல் நோய்த்தொற்றுகளுக்கு எளிதில் ஆளாகும். அதேபோல், மிதமான உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு செல்களைச் செயல்பட வைக்கிறது.

அதிகமான மன அழுத்தம் உடலின் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என்பதால், மன அமைதியையும் கவனிக்க வேண்டும். மேலும், குளிர்ந்த நீரில் குளிப்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்ட உதவலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில், ‘இம்யூன் பூஸ்டிங்’ என்ற பெயரில் சந்தையில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் கட்டாயமாக பயன் தரும் என்பதில்லை. இயற்கையான உணவுப் பழக்கங்கள், ஒழுங்கான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களே நீண்டகால பாதுகாப்புக்கு சிறந்த வழியாகும்.