இந்த தவறை கம்பீர் செய்யலன்னா.. இங்கிலாந்தை இந்தியா சாய்த்திருக்கும்.. மஞ்ரேக்கர் அதிரடி!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில்  சமன் செய்தது. 

இந்த தவறை கம்பீர் செய்யலன்னா.. இங்கிலாந்தை இந்தியா சாய்த்திருக்கும்.. மஞ்ரேக்கர் அதிரடி!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில்  சமன் செய்தது. 

கடைசி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திக் திக்வெற்றி பெற்று இங்கிலாந்து வீரர்களுக்கு பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில் அந்தத் தொடரில் பயிற்சியாளர் கம்பீர் சரியான பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்திருந்தால் 3 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றிருக்கும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

பேஸ்பால் ஸ்டைலை பின்பற்றும் இங்கிலாந்து அணி, லார்ட்ஸ் போட்டியை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க முயற்சித்தது.

இந்த நிலையில், அந்தப் போட்டிகளில் குல்தீப் யாதவ் விளையாடியிருந்தால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகமாகி இருக்கும் என்று மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

கம்பீர் தேர்வில் ஜெய்ஸ்வால், கில், ராகுல், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் மட்டுமே தரமான எதிரணிக்கு எதிராக பாதுகாப்பு கேடயங்களாக இருந்தார்கள்.

ஆனால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு துறையைப் பார்த்து நான் பயப்பட்டேன். கம்பீர் கையாண்ட வினோதமான தந்திரங்கள் மற்றும் பிளேயிங் லெவன், பந்துவீச்சு மாற்றங்கள் ஆகியவை பயத்தைக் கொடுத்தன. ஒருவேளை அதை இன்னும் சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தால் 3 – 1 என்ற கணக்கில் இந்தியா, இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கும்.

தொடர் முழுவதும் குல்தீப் யாதவ் விளையாடாதது கடைசி வரை அனைவருக்கும் பெரிய ஆச்சரியமாகவே இருந்தது. நீங்கள் பலவீனமான பந்துவீச்சு தாக்குதலை வைத்துக் கொண்டு எதிரணியிடம் மோதினீர்கள். 

மேலும் பேட்டிங்கில் நீங்கள் செய்த விசித்திரமான தேர்வுகள் தோல்வியை கொடுத்திருக்கலாம். இதே போன்ற அணுகுமுறையை கடந்த ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்தியதாலேயே இந்தியா தோல்விகளை சந்தித்தது.

தொடர் சமனில் முடிந்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் இந்த தவறுகள் பற்றி தேர்வுக்குழுவினர் மற்றும் பிசிசிஐ கேள்வி கேட்கவில்லை என்றால், இந்தியா மற்றொரு தொடரில் தடுமாற்றத்தை சந்திக்க நேரிடும். ” என்று கூறினார். 

ஒருவேளை, இந்திய அணி கடைசிப் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தால் கம்பீர் கடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.