இந்த வாய்ப்பை விட முடியாது... இந்தியா டி20 கோப்பையை வெல்லும்.. ரோகித் நம்பிக்கை!
இந்த வருடம் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை இந்திய அணி நிச்சயமாக வெற்றிக் கொள்ளும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்த வருடம் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை இந்திய அணி நிச்சயமாக வெற்றிக் கொள்ளும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
2022 டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவி வெளியேறியது.
இதனால் ஏற்பட்ட மனவேதனையால் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் கடந்த 14 மாதங்களாக டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்தனர். இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தயார் செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தொடர்பில் பங்கேற்க ஆர்வம் காட்டியதால் ஆப்கானிஸ்தான் எதிரான டி20 தொடரில் இருவரும் களம் இறங்கினர்.
கடைசி டி20 போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 69 பந்துகளில் 121 ரன்கள் விளாசியதுடன், இந்திய அணி மூன்றுக்கு 0 என்ற கணக்கில் தொடரை வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கேப்டன் ரோகித் சர்மா 50 ஓவர் உலகக் கோப்பை தான் தன்னை பொறுத்தவரை மிகப்பெரிய உலகக் கோப்பையாக இருந்தாக கூறியுள்ளார்.
எனினும், அதானால் டி20 உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று அர்த்தம் கிடையாது என்றும் தான் சிறுவயதில் இருந்து 50 ஓவர் உலகக் கோப்பையை பார்த்து வளர்ந்தவன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை வெற்றிக்கொள்ள கடுமையாக முயற்சி செய்த போதும், அந்த உலகக்கோப்பை வெல்ல முடியவில்லை என்றும் இதனால் ஒட்டுமொத்த அணியும் ரசிகர்களும் சோகமாக இருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள மற்றுமொரு வாய்ப்பை பயன்படுத்தி எப்படி டி20 உலக கோப்பையில் வெல்ல வேண்டும் என்பதை முயற்சி செய்து வருவதாகலும், வீரர்கள் அனைவருமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்காக விளையாட பலருக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், அப்படி வாய்ப்பு கிடைக்கும் போது அதை நன்றாக பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும், அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் அவருடைய பணி என்ன என்பதை தெளிவாக கொடுப்பதாபவும் ரோஹித் சர்மா சுட்டிக்காட்யுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |