92 ரன்களை விளாசிய ரோஹித்.. யாரும் எதிர்பாராத வகையில் சிக்ஸர் மழை!

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அதிரடியாக ஆடினார். 

92 ரன்களை விளாசிய ரோஹித்.. யாரும் எதிர்பாராத வகையில் சிக்ஸர் மழை!

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அதிரடியாக ஆடினார். 

யாரும் எதிர்பாராத வகையில் பவர் பிளே ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்து ஆஸ்திரேலியா அணியை திணறடித்தார்.

5 ஓவர்களின் முடிவில் இந்திய அணியின் மொத்த ஸ்கோரில் 96 சதவீத ரன்களை ரோஹித் சர்மா மட்டுமே எடுத்து இருந்தார்.

ஐந்து ஓவர்களின் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 52 ஆக இருந்தது. அதில் 50 ரன்களை ரோஹித் சர்மா மட்டுமே எடுத்திருந்தார். ரிஷப் பண்ட் அதில் 1 ரன் எடுத்து இருக்க, மற்றொரு ரன் வைடு மூலம் கிடைத்தது. 

ரோஹித் சர்மா வெறும் 19 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார். 2024 டி20 உலகக் கோப்பையில் இதுவே அதிவேக அரை சதம் ஆகும். 

அதன் பின் ரிஷப் பண்ட்டும் அதிரடியாக ஆட முயன்றார். எனினும், ரோஹித் சர்மா அளவுக்கு அவரால் ரன் குவிக்க முடியவில்லை. ரோஹித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 8 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார். 

எனினும், விராட் கோலி இந்த போட்டியில் டக் அவுட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...