3ஆவது டெஸ்டில் அஸ்வின் செய்யபோகும் வரலாற்று சாதனை... புகைச்சலில் முன்னாள் வீரர்கள்!
இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி 15ஆம் தேதி ஆரம்பமாக உள்ள நிலையில், தமிழக வீரர் அஸ்வின் மாபெரும் சாதனை ஒன்றை படைக்க இருக்கின்றார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட் எடுத்தால், 500 விக்கெட்டை அதிவேகமாக எடுத்த 2ஆவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்திருப்பார்.
ஆனால், முதல் இன்னிங்சில் விக்கெட் எடுக்காத அஸ்வின், 2ஆவது இன்னிங்சில் 3 முக்கிய விக்கெட்டை எடுத்து அசத்தி இருந்ததுடன், ஒரு விக்கெட்டால் சாதனை படைப்பதில் தவறி விட்டார்.
இந்த நிலையில், அடுத்து டெஸ்டில் வெறும் ஒரு விக்கெட் எடுத்தால் 500 விக்கெட் எடுத்த 2ஆவது இந்திய வீரர் மற்றும் முரளிதரனுக்கு பிறகு அதிவேகமாக இந்த மைல்கல்லை தொட்ட வீரர் என்ற சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இரண்டாவது இடத்தில் உள்ள அணில் கும்ப்ளே 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டை கைப்பற்றினார்.
கேப்டன் பதவிக்கு மோதல்.. ரோகித், ஹர்திக்குக்கு தோனி சொன்ன அறிவுரை!
அஸ்வினுக்கு இந்த சாதனையை படைக்க சிறப்பான வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அஸ்வின் குறித்து யுவராஜ் சிங் பல எதிர்மறையான விடயங்களை கூறி உள்ளார்.
தன் நண்பன் ஹர்பஜன் சிங் ரெக்கார்டை அஸ்வின் உடைத்துவிட்டாரே என்ற வயிற்று எரிச்சலை அவர் பல முறை காட்டி இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
மேலும், ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் தான், அஸ்வின் விக்கெட்டை எடுப்பதாக ஹர்பஜன் சிங்கும் கூறி இருக்கிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |