இடுப்புல ஏறி உட்கார்ந்து.. கையை கடிச்செல்லாம் விளையாடுறாங்க.. ரவீனா ரொம்ப ஓவர்மா!
பிக் பாஸ் தமிழ் சீசன் 7ன் அசல் கோலார் மற்றும் நிவாஷினியாக மணிசந்திரா மற்றும் ரவீனா தாஹா மாறிவிட்டதாக பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7ன் அசல் கோலார் மற்றும் நிவாஷினியாக மணிசந்திரா மற்றும் ரவீனா தாஹா மாறிவிட்டதாக பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
மெளனராகம் 2 சீரியல் மூலம் பிரபலமான ரவீனா தாஹாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் சின்னத்திரையில் பல நண்பர்களும் உள்ளனர்.
நடனக் கலைஞர் மணிசந்திரா இந்த சீசனில் டஃப் போட்டியாளராக இருப்பார் என பார்த்தால், எந்நேரமும் ஜாலியாக ரவீனா பின்னாடியே திரிந்து வருகிறார்.
ரவீனாவை சின்ன வீட்டில் தள்ளியும் மணிசந்திராவின் சேட்டை தொடர்ந்து வரும் நிலையில், அவர் இடுப்பில் ஏறி அமர்வது, கையை கடித்து விளையாடுவது என ரவீனா தாஹா சேட்டைக்காரியாக மாறி வரும் நிலையில், பிக் பாஸ் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.
டைட்டில் வின்னர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்றுள்ள மணிசந்திரா விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் 9வது சீசனில் டான்ஸ் ஆடி டைட்டிலையே வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் குக் வித் கோமாளிகளையும் இன்னொரு பக்கம் நடனக் கலைஞர்களையும், இன்னொரு பக்கம் சீரியல் நடிகைகளையும் இந்த முறை பிக் பாஸ் போட்டியாளர்களாக இறக்கி உள்ளனர்.
இடுப்பில் ஏறி அமர்ந்த ரவீனா
காலையில் லியோ படத்தில் இருந்து நா ரெடி தான் பாடல் முதல் நாளில் போடப்பட்ட நிலையில், ரவீனா தாஹா பாடல் முடிவில் மணிசந்திராவின் இடுப்பில் ஏறி அமர்ந்த காட்சிகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. 19 வயதான ரவீனா வெளியே மணிசந்திராவுடன் சுற்றி வந்த நிலையில், உள்ளேயும் மணிசந்திராவை சுற்றி வருகிறார்.
கையை கடித்து விளையாட்டு
கையில் எழுதி மறைமுகமாக மணிசந்திராவுக்கு ரவீனா காட்டுவது, மணியின் கையை கடித்து விளையாடுவது என எல்லை மீறி செல்கிறார் என பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஐஷுவை அருகே வைத்துக் கொண்டு மணியின் கையை ரவீனா கடித்த நிலையில், தன்னுடைய லிப்ஸ்டிக்கும் ஒட்டிக் கொண்டதாக ஃபீல் செய்து அதை கன்னத்தில் எடுத்து தடவி துடைத்தது எல்லாம் ரொம்ப ஓவர் என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
டாட்டூ
இப்போதெல்லாம் காதலர்கள் கடித்து அந்த இடத்தில் அப்படியே டாட்டூ போட்டுக் கொள்கின்றனர் என ஜொள்ளு பார்ட்டியாகவே மாறிவிட்டார் மணிசந்திரா என ஒரேயடியாக விளாசி வருகின்றனர்.
அசல் கோலார் மற்றும் நிவாஷினிக்கு நடந்ததை போல இவர்களையும் வெளியே அனுப்புங்க, க்ரிஞ்சா இருக்கு என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |