அடுத்த ஜடேஜா இவர்தான்.. தமிழக வீரருக்கு கிடைத்த பெருமை!

சாய் கிஷோரை புகழ்ந்து பேசிய ஷர்துல் தாக்குர், "அவர் மிக சிறப்பாக பந்து வீசினார். நீண்ட காலத்துக்கு பிறகு ஜடேஜாவுக்கு பின் ஒரு தரமான இடது கை ஸ்பின்னரை பார்க்கிறேன்" என்றார்.

அடுத்த ஜடேஜா இவர்தான்.. தமிழக வீரருக்கு கிடைத்த பெருமை!

2024 ரஞ்சி ட்ராபி தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் சாய் கிஷோர் 53 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.

இந்த நிலையில், சாய் கிஷோரை அடுத்த ரவீந்திர ஜடேஜா என  பலரும் பாராட்டி வருவதுடன், அவருக்கு விரைவில் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சாய் கிஷோரை புகழ்ந்து பேசிய ஷர்துல் தாக்குர், "அவர் மிக சிறப்பாக பந்து வீசினார். நீண்ட காலத்துக்கு பிறகு ஜடேஜாவுக்கு பின் ஒரு தரமான இடது கை ஸ்பின்னரை பார்க்கிறேன்" என்றார்.

சில மாதங்களுக்கு முன் இந்திய டி20 அணியில் சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைத்ததுடன், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு சென்ற இந்திய அணியில் ஆடி இருந்தார். 

தற்போது ரஞ்சி டிராபி தொடர் மூலம் மீண்டும் உச்சகட்ட ஃபார்முக்கு திரும்பிய சாய் கிஷோர், தமிழ்நாட்டில் இருந்து ரஞ்சி கோப்பையில் 50க்கும் மேற்பட்ட விக்கெட்கள் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...