ரன்கள் குவித்தும் நியூசிலாந்து பரிதாப தோல்வி.. பாகிஸ்தான் சாதனை வெற்றி.. அரையிறுதி வழி திறந்தது?
நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டக் வொர்த் லூயிஸ் விதிப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டக் வொர்த் லூயிஸ் விதிப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 400 ரன்கள் குவித்தும் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி மட்டும்தான் 400 ரன்களுக்கு மேல் அடித்தும் தோல்வியை தழுவி இருந்தது.
பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து தொடக்க வீரராக களம் இறங்கிய கான்வே 35 ரன்களில் ஆட்டம் இழக்க கேப்டன் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி 95 ரன்கள் சேர்த்தார்.
எனினும் ரச்சின் ரவீந்திரா 94 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது.
402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. இதில் தொடக்கத்திலேயே அப்துல்லா ஷபிக் ஆட்டம் இழந்தார்.
இதனை எடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு பக்கர் சமான் மற்றும் பாபர் அசாம் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சி செய்தனர். 402 ரன்களை குவிக்க வேண்டும் என்றாலும் பாபர் அசாம் தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
எனினும் மறுமுனையில் அதிரடி காட்டிய ஃபக்கர் சாமான் சிக்ஸர் பௌண்டரிகள் என பறக்க விட்டார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
ஃபக்கர் சாமான் 39 பந்துகளில் அரை சதம் கடந்த நிலையில் தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 63 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் உலககோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பக்கர் சாமான் படைத்தார்.
தொடர்ந்து பக்கர் சமான் அதிரடி காட்டினார். 81 பந்துகளில் 126 ரன்கள் அவர் சேர்த்தார். இதில் எட்டு பவுண்டர்களும், 11 சிக்ஸர்களும் அடங்கும். கேப்டன் பாபர் அசாம் 63 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார்.
பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து பாகிஸ்தான அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தகவத் லூஸ் விதிப்படி வென்றதாக அறிவிக்கப்பட்டது இதை அடுத்து பாகிஸ்தான அணி புள்ளி பட்டியலில் தற்போது 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி விட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |