புதிய சிக்கல்.. அடுத்த ஆட்டத்தில் ஓய்வு.. ஐபிஎல் தொடரில் விலகவுள்ள தோனி? 

இளம் வீரர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 231ஆக இருந்தது. 

புதிய சிக்கல்.. அடுத்த ஆட்டத்தில் ஓய்வு.. ஐபிஎல் தொடரில் விலகவுள்ள தோனி? 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனி, நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகக்கூடும் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய டோனி 16 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி, மூன்று சிக்சர்  அடங்கலாக 37 ரன்கள் விளாசினார்.

இளம் வீரர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 231ஆக இருந்தது. 

இந்த நிலையில், தோனி எவ்வளவுதான் அபாரமாக விளையாடினாலும் அவருக்கு வயதாகிவிட்டதால் இளம் வயதில் எப்படி சிறப்பாக செயல்பட்டாரோ அதேபோல் இப்போது செயல்பட முடியும் என நினைக்க முடியாது.

கடந்த சீசனில் காயத்தோடு விளையாடிய தோனி,  ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடனே தன்னுடைய காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். 

இந்த நிலையில், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது 19 புள்ளி 2 பந்தில் தோனி அடித்த ஒரு ஷாட் தற்போது அவருக்கு சிக்கலை கொடுத்து உள்ளது.

ஒரே கையால் தோனி சிக்ஸர் அடித்ததன் காரணமாக தோனி கடைசி ஓவரில் ரன்களே ஓடாமல் நின்றார். போட்டி முடிந்த பிறகு கூட தோனி ஒரு மாதிரி நடந்தார்.

இதன் காரணமாக தோனி வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது சந்தேகமாகி உள்ளது.

அது மட்டுமின்றி தொடர்ந்து  ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வலியுடன் விளையாடி காயத்தை பெரிதாக்கி கொள்வது நல்லதல்ல என அவருக்கு நெருங்கியவர்கள் ஆலோசனை சொல்லியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஒருவேளை டோனி ஐபிஎல் தொடரிலிருந்து பாதியில் ஓய்வு பெற்றால், அதை ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்பதே தற்போது கேள்வியாக உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...