மயங்க் யாதவ் வேகத்துல என்னால கீப்பராவே இருக்க முடியல.. பாவம் பேட்ஸ்மேன்கள்... கேஎல்.ராகுல்
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பதினைந்தாவது போட்டியில் ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பதினைந்தாவது போட்டியில் ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின.
லக்னோ அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி, மூன்றாவது போட்டியில் இரண்டாவது வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் விளையாடிய ஆர்சிபி அணி மூன்றாவது தோல்வியை சந்தித்தது.
இன்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.
அந்த அணிக்கு குயிண்டன் பீகாக் 82, நிக்கோலோஸ் பூரன் 40 ரன்கள் எடுத்தார்கள். ஆர்சிபி தரப்பில் மேக்ஸ்வெல் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட் கைப்பற்றினார்.
இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு இளம் இந்திய வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் தனது வேகத்தால் பெரிய நெருக்கடியை உண்டாக்கினார்.
மொத்தம் நான்கு ஓவர் பந்து வீசிய அவர் முக்கிய மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி, 14 ரன்கள் மட்டுமே விட்டு தந்தார். இவரது சிறப்பான பந்துவீச்சின் காரணமாக ஆர்சிபி அணியால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
சிறப்பாக பந்து வீசிய மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இரண்டாவது போட்டியில் விளையாடும் அவருக்கு இது இரண்டாவது ஆட்டநாயகன் விருது ஆகும்.
போட்டிக்கு பின் கேப்டன் கேஎல்.ராகுல் பேசுகையில் - மயங்க் யாதவ் வீசிய ஒரு பந்து கீப்பராக இருந்த என்னையே தாக்கியது. கடந்த இரண்டு போட்டிகளாக அவர் பந்து வீசியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த இரண்டு சீசன்களாக விளையாடுவதற்கு அவர் மிகவும் பொறுமையாக காத்திருந்தார். காயம் காரணமாக அவர் கடந்த ஆண்டு விளையாட முடியவில்லை. ஆனால் மும்பையில் கடுமையாக உழைத்து வந்தார். 155 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவது என்பது சாதாரணம் கிடையாது என்பதை அவர் புரிந்து கொண்டார்.
நல்ல சுபாவமும் கொண்டவர். விக்கெட் கீப்பராக பின்னாலிருந்து அவர் பந்து வீசுவதை பார்த்து மகிழ்ந்தேன். அவர் பந்து வீசும் பொழுது நான் விக்கெட் கீப்பராக இருக்க மட்டுமே விரும்புகிறேன். அவருடைய வேகம் அவ்வளவு அபாரமான ஒன்றாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |