தனி விமானம் தேவையில்லை... இந்திய அணியுடனே வருகிறேன்.. டெல்லி வந்து சேர்ந்த விராட் கோலி
ஐபில் தொடர் முடிவடைந்த உடன் இலண்டன் சென்ற விராட் கோலி தற்போது 5 மாதத்திற்கு பிறகு மீண்டும் இந்தியா வந்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ஐபில் தொடர் முடிவடைந்த உடன் இலண்டன் சென்ற விராட் கோலி தற்போது 5 மாதத்திற்கு பிறகு மீண்டும் இந்தியா வந்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் 19ஆம் திகதி பெர்த் நகரில் நடைபெறுவதுடன், இதில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாட உள்ளனர்.
ஏற்கெனவே ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்ட நிலையில் இருவரும் ஒரு நாள் அணியில் தொடர்ந்து நீடிப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பங்கு பெற வேண்டும் என இருவரும் முடிவு எடுத்து இருக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது.
இதனால் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக செயல்பட்டு அணியில் நீடிக்க வேண்டும் என இருவரும் முடிவு எடுத்து இருக்கிறார்கள். இந்த வகையில் ரோகித் சர்மா தொடர்ந்து உடல் தகுதியை குறிவைத்து கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.
ஆனால் விராட் கோலி லண்டனில் தங்கி இருந்ததால் அவர் என்ன செய்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை. இங்கிலாந்து தொடரின் போது கூட விராட் கோலி இந்தியா போட்டியை பார்க்க நேரில் வரவில்லை.
ஆனால் அப்போது விராட் கோலி தனியாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி மட்டும் வந்தது. இந்த தருணத்தில் விராட் கோலி நேரடியாக லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தனி விமானம் மூலம் வந்து விடுவார் என கூறப்பட்டது.
ஆனால் அதை விரும்பாத விராட் கோலி தாம் இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாகவும், இதனால் தான் லண்டனில் இருந்து நேரடியாக இந்தியா வருகிறேன் என்றும் கூறியிருந்தார்.
அதேபோல் நாளை அக்டோபர் 15ஆம் திகதி இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்ல உள்ளனர். அதற்கு முன்பாகவே டெல்லியில் தற்போது விராட் கோலி வந்து இறங்கி இருக்கிறார்.
தற்போது இந்திய அணி வீரர்கள் டெல்லியில் தான் முகாமிட்டுள்ளனர். டெல்லியில் தனது குடும்பத்தினரை சந்திக்கும் கோலி மீண்டும் இந்திய அணியுடன் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.
