சோகத்திலும் ஒரு சாதனை... இங்கிலாந்து மண்ணில் பும்ராவின் மெகா ரெக்கார்டு!
ஒரு விக்கெட்டை வீழ்த்தினால், இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற இஷாந்த் சர்மாவின் சாதனையை சமன் செய்ய முடியும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை பும்ரா படைத்துள்ளார்.
இந்த இன்னிங்ஸில் இன்னும் 3 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினால், இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீசிய ஆசிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெறுவார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 358 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது.
இதன்பின் 3வது நாள் ஆட்டமான இன்று ஜோ ரூட்டின் அபாரமான ஆட்டம் காரணமாக 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 544 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இதன் மூலமாக இங்கிலாந்து அணி 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலமாக இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருவதாக பார்க்கப்படுகிறது. இன்னும் 30 ரன்கள் முன்னிலை பெற்றாலும், இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி என்று சொல்லிவிடலாம்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேபோல் ஜேமி ஸ்மித்தின் விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார்.
இதன் மூலமாக பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையை பும்ரா படைத்திருக்கிறார்.
இங்கிலாந்தில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்ம்கிறார். அதேபோல் பும்ராவுக்கு இன்னும் இரு சாதனைகள் படைக்கவும் வாய்ப்பு அமைந்துள்ளது.
இந்த இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால், இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற இஷாந்த் சர்மாவின் சாதனையை சமன் செய்ய முடியும்.
அதேபோல் இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், இங்கிலாந்துல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைக்கலாம்.
இதுவரை வாசிம் அக்ரம் 14 போட்டிகளில் விளையாடி 53 விக்கெட்டுகளை இங்கிலாந்து மண்ணில் வீழ்த்தி இருக்கிறார். இதனை பும்ரா செய்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.