இந்திய உத்தேச அணியில் பெரிய மாற்றம்.. நீக்கப்பட்ட முக்கிய வீரர்? 15 பேர் பட்டியல் வெளியானது!

நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய உத்தேச அணியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன் முக்கிய வீரரை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய உத்தேச அணியில் பெரிய மாற்றம்.. நீக்கப்பட்ட முக்கிய வீரர்? 15 பேர் பட்டியல் வெளியானது!

நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய உத்தேச அணியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன் முக்கிய வீரரை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே 26ஆம் தேதி ஐபிஎல் 17ஆவது சீசன் நிறைவு பெறுவதை தொடர்ந்து, ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் ஆரம்பமாகும்.

உலகக் கோப்பை லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் குழுவொன்றை நியமித்து இருந்தார்.

தற்போது, பிட்ச்கள் குறித்த அறிக்கையை, பிசிசிஐ நிர்வாகிகள் குழு அஜித் அகார்கரிடம் கொடுத்துள்ளதுடன், அதில், போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பௌலர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதுடன், ஸ்லோ விக்கெட்டில் கோலி அபாரமாக ஆடக் கூடியவர் என்பதால், அவர் நிச்சயம் அணியில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, கே.எல்.ராகுல், துரூவ் ஜோரல் போன்றவர்களுக்கு இடையில் பலத்த போட்டி இருக்கும் நிலையில், ரிஷப் பந்த், சாம்சன் இருவரையும் சேர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

ஐபிஎல் 17ஆவது சீசனில், தொடர்ந்து அபாரமாக பந்துவீசி வரும் மயங்க் யாதவ், 3 போட்டிகளில் 6 எகனாமியில் 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தி உள்ளதால், அவரை தேர்வாக வைத்திருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹர்திக் பாண்டியா காலில் இன்னமும் வலி இருப்பதாகவும், இதனால்தான் மும்பைக்கு இன்னமும் சிறப்பாக செயல்பட முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருவதால், அவர் மீது முழு நம்பிக்கை இருப்பதால், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக அவரை விளையாட வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அணில் இருக்கக்கூடிய 15 பேர் பட்டியல் 

  1. ரோஹித் சர்மா (கேப்டன்)
  2. யாஷஸ்வி ஜெய்ஷ்வால்
  3. ஷுப்மன் கில்
  4. விராட் கோலி
  5. சூர்யகுமார் யாதவ்
  6. ரிங்கு சிங்
  7. ஹர்திக் பாண்டியா / கே.எல்.ராகுல்,
  8. ரிஷப் பந்த்
  9. சஞ்சு சாம்சன்
  10. ரவீந்திர ஜடேஜா
  11. சஹல்
  12. குல்தீப் யாதவ்
  13. ஜஸ்பரீத் பும்ரா
  14. முகமது சிராஜ்
  15. மயங்க் யாதவ்

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp