இடியாக வந்த செய்தி.. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முக்கிய வீரர் விலகல்?

முதலாவது  டி20 கைவிடப்பட்ட நிலையில், எஞ்சி இரண்டு போட்டிகளில் ஒன்றுக்கு ஒன்று என இரண்டு அணிகளும் வெற்றிப்பெற்று இந்த தொடரை சமன் செய்துள்ளன.

இடியாக வந்த செய்தி.. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முக்கிய வீரர் விலகல்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி மூன்று டி20 மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய அணியின் ஜூனியர் வீரர்கள் டி20 ஒருநாள் தொடரில் விளையாடுகின்றனர்.

முதலாவது  டி20 கைவிடப்பட்ட நிலையில், எஞ்சி இரண்டு போட்டிகளில் ஒன்றுக்கு ஒன்று என இரண்டு அணிகளும் வெற்றிப்பெற்று இந்த தொடரை சமன் செய்துள்ளன.

தென்னாப்பிரிக்காவை துவைத்து எடுத்த இந்தியா.. வெற்றிக்கு ஏதுவாக 4 காரணங்கள்!

இந்த நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணிக்கு திரும்பும் சீனியர் வீரர்களின் செயல்பாடும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழும் முகமது சமி காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலக வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இன்னும் டெஸ்ட் தொடருக்கு 12 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் ஷமியின் காயம் குணமடைய வாய்ப்பு இல்லை என தெரிகிறது. இதனால் சமி டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது. 

பும்ரா, சிராஜ், சமி என்ற மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இணைந்து செயல்படும்போது தென்னாபிரிக்க வீரர்களுக்கு அது கடும் திண்டாட்டமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆனால் தற்போது ஷமி இல்லாததால் இளம் வீரர் பிரசித் கிருஷ்ணாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரசித் கிருஷ்ணா அண்மையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் ஒரு ஹாட்ரிக் உட்பட ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கேப்டனாக மாறிய ஜடேஜா.. போட்டியில் திடீர் திருப்பம்.. சூர்யகுமாருக்கு என்ன ஆச்சு?

பிரசித் கிருஷ்ணா நல்ல உயரம் என்பதால் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களுக்கு அது மிகப்பெரிய சாதகமாக இருக்கும். எனினும் சமி போன்ற ஒரு வீரர் இடத்தை பிரசித் கிருஷ்ணாவால் நிரப்ப முடியுமா என்றால் அது சந்தேகமே. 

இதுவரை இந்திய அணி ஒருமுறை கூட தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இவ்வாறான நிலையில் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...