தோனியின் சாதனையை சமன் செய்த ஜித்தேஷ் சர்மா... இனி அந்த இளம் வீரரருக்கு அணியில் இடமில்லை?

ஜித்தேஷ் சர்மாவின் இந்த சிறப்பான செயல்பாடு, அடுத்தடுத்த போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறுவது கடினமாகியுள்ளது.

தோனியின் சாதனையை சமன் செய்த ஜித்தேஷ் சர்மா... இனி அந்த இளம் வீரரருக்கு அணியில் இடமில்லை?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற நிலையில் முன்னணியில் உள்ளது.

இந்தப் போட்டியில் வழக்கமான விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலியா தொடரில் வாய்ப்பு பெற்ற ஜித்தேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இது இந்திய அணி நிர்வாகம் நடுவரிசையில் திறமையான விக்கெட் கீப்பரைத் தேடுவதைத் தெளிவாக்குகிறது.

ஜித்தேஷ் சர்மா, பேட்டிங்கில் 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தாலும், அவரது விக்கெட் கீப்பிங் திறன் அனைவரையும் கவர்ந்தது. வேகப்பந்து மற்றும் சுழற்பந்து ஆகிய இரண்டையும் சிறப்பாக கையாண்ட அவர், நான்கு வீரர்களை ஆட்டமிழக்க வைத்தார். இது டி20 கிரிக்கெட்டில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்த சாதனை, முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் முன்பு பதிவு செய்த சாதனையை சமன் செய்யும் வகையில் உள்ளது. தோனி மூன்று முறையும், கார்த்திக் ஒரு முறையும் ஒரே டி20 போட்டியில் நான்கு வீரர்களை ஆட்டமிழக்க வைத்திருக்கின்றனர். இருப்பினும், தோனி இங்கிலாந்துக்கு எதிராக 2018-இல் ஒரே போட்டியில் 5 வீரர்களை ஆட்டமிழக்க வைத்த சாதனை இன்னும் உடைக்கப்படாமல் உள்ளது.