ஒரே டெஸ்டில் இரண்டு சதம்... பல ஜாம்பவான்கள் செய்யாத சாதனை... இங்கிலாந்து மண்ணில் சாதித்த முதல் இந்திய வீரர்...!
கவாஸ்கர், சச்சின், ராகுல் டிராவிட், விராட் கோலி என பல ஜாம்பவான்கள் இங்கிலாந்தில் விளையாடிய நிலையில் பண்ட் மட்டும்தான் இந்த சாதனையை செய்திருக்கிறார்.
 
                                இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடிவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய வீரர் ரிஷப் பண்ட் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
அத்துடன், இங்கிலாந்து மண்ணில் இத்தகைய சாதனையை படைத்த முதல் இந்திய வீரர் ரிஷப் பண்ட் ஆவார்.
கவாஸ்கர், சச்சின், ராகுல் டிராவிட், விராட் கோலி என பல ஜாம்பவான்கள் இங்கிலாந்தில் விளையாடிய நிலையில் பண்ட் மட்டும்தான் இந்த சாதனையை செய்திருக்கிறார்.
முன்னதாக, 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியதுடன், தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் நான்கு ரன்களிலும், சாய் சுதர்சன் 30 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
90 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த கில் இரண்டாவது இன்னிங்ஸில் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனையடுத்து, கே எல் ராகுலுடன் பண்ட் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார்.
 
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். முதலில் 83 பந்துகளில் பண்ட், அரை சதம் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரை சதம் மேல் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
தொடர்ந்து பண்ட் 13 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களுடன் 130 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதில் இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் படைத்தார்.
அத்துடன், உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே ஆண்டி பிளவருக்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து இத்தகைய சாதனையை பண்ட் ஒரு டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்திருக்கின்றார்.
மேலும், விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், விராட் கோலிக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் ஒரே டெஸ்டில் இரண்டு சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் படைத்திருக்கிறார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






