முக்கிய வீரருக்கு காயம்... செம அப்செட்டில் கில்... இந்திய அணிக்கு கிடைத்த ஷாக் தகவல்!

ரிஷப் பண்டுக்கு கடந்த போட்டியின்போது கையில் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் பேட்டிங் மட்டுமே செய்த நிலையில், விக்கெட் கீப்பிங்கை துருவ் ஜூரேல் கவனித்துக்கொண்டார். ரிஷப் பண்ட் விளையாடுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முக்கிய வீரருக்கு காயம்... செம அப்செட்டில் கில்... இந்திய அணிக்கு கிடைத்த ஷாக் தகவல்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி  இளம் அணியாக இருந்தாலும் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இருப்பினும் சில சிறு சிறு வாய்ப்புகளை தவறவிட்டதன் விளைவாக 2 போட்டிகளில் தோற்றுவிட்டது. 

அனுபவ வீரர்களான ஜடேஜா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன், சுப்மான் கில் முதலிரண்டு போட்டிகளில் நல்ல பார்மில் இருந்தாலும் 3வது போட்டியில் சற்று சறுக்கிவிட்டார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் பொறுப்புடன் விளையாடததன் விளைவு இந்திய அணிக்கு பெரிய குறையாக மாறியுள்ளது.

பேட்டிங்கை குறை சொல்லும் அளவு இல்லையென்றாலும் ஒரு சில வீரர்கள் தொடர்ந்து ரன்களை குவிக்காமல் இருப்பதும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை சிராஜ் மட்டுமே 3 போட்டிகளிலும் பந்துவீசி உள்ளார். அவர் மொத்தம் 109 ஓவர்களை வீசி 13 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். 

ஜஸ்பிரித் பும்ரா 2 போட்டிகளில் 12 விக்கெட்டுகள், ஆகாஷ் தீப் 2 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். அதிக ரன்களை வாரி கொடுத்த பிரசித் கிருஷ்ணா 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

வேலைப்பளூ காரணமாக மொத்த 5 போட்டிகளில் 3இல் மட்டுமே ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்தார்.

அப்படியிருக்க மீதம் இருக்கும் 2 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என்ற நிலையில், அந்த ஒரு போட்டியிலும் அவருக்கு பதில் மீண்டும் பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பளிப்பதற்கு பதில், ஸ்குவாடில் இருக்கும் அர்ஷ்தீப் சிங்கை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வர கம்பீர் - கில் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.

டெஸ்ட் அணிக்கு உடனே திரும்பி வாங்க கோலி.. இன்னும் நேரம் இருக்கு... விடுக்கப்பட்ட அழைப்பு!

இந்நிலையில், இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. லார்ட்ஸ் டெஸ்ட் முடிந்த கையோடு இரண்டு நாள்கள் ஓய்வுக்கு பிறகு, இந்திய அணி தற்போது பெக்கன்ஹாம் நகரில் 4வது போட்டிக்காக தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

வலைப்பயிற்சியின்போது இடது கை வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங், பந்தை தடுக்கும்போது கையில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அவரது கையில் தற்போது பேண்டேஜ் போடப்பட்டிருக்கிறது. இதனை உதவி பயிற்சியாளரான ரியான் டென் டோஷேட் உறுதிப்படுத்தியிருக்கிறார். 

ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி தொடங்கும் நிலையில், இந்த மைதானம் அதிகமாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக இருக்கும் என்பதால் பும்ரா விளையாடாதபட்சத்தில் அர்ஷ்தீப் களமிறக்கப்படலாம் என கூறப்பட்டது.

ஆனால், தற்போது அவருக்கு ஏற்பட்ட காயத்தின் நிலை குறித்து முழுமையாக தெரியாததால் அவர் போட்டிக்கு உடற்தகுதியுடன் இருப்பாரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

ரிஷப் பண்டுக்கு கடந்த போட்டியின்போது கையில் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் பேட்டிங் மட்டுமே செய்த நிலையில், விக்கெட் கீப்பிங்கை துருவ் ஜூரேல் கவனித்துக்கொண்டார். ரிஷப் பண்ட் விளையாடுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இங்கிலாந்து அணியிலும் ஷோயப் பஷீருக்கு இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மீதம் உள்ள 2 போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில் லியாம் டாவ்சான் என்பவரை இங்கிலாந்து அணியில் சேர்த்துள்ளது. 

மேலும், பிரைடன் கார்ஸ் கால் விரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். மேலும் இங்கிலாந்து அணி கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரும் அதிக வேலைப் பளூவில் உள்ளனர்.