ஐசிசி உலக கோப்பை 2023 - நடுவரானாரா ஸ்ரேயாஸ் ஐயர்? அவரை போலவே யாருய்யா இவரு? ரசிகர்கள் ஆச்சரியம்!
ஐசிசி உலக கோப்பை 2023: ஐசிசி உலக கோப்பையில் நேற்று இந்திய அணியின் பஸ் டிரைவர் விஜய் டிவி புகழ் போல் இருப்பதாக அஸ்வின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
ஐசிசி உலக கோப்பை 2023: ஐசிசி உலக கோப்பையில் நேற்று இந்திய அணியின் பஸ் டிரைவர் விஜய் டிவி புகழ் போல் இருப்பதாக அஸ்வின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
தற்போது இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் போலவே நடுவர் ஒருவர் இருப்பது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்திருக்கிறது.
நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டம் ஒன்றில் நடுவர் ஸ்ரேயாஸ் ஐயரை உரித்து வைத்தது போல் நடுவர் ஒருவர் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கிறார்.
பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதிய பயிற்சி ஆட்டத்தில் அக்சய் தாத்தரே என்பவர் நடுவராக செயல்பட்டிருந்தார். அப்போது ஆட்டத்தின் முதல் பந்தே ஒய்டாக மாற அவர் ஓயிடு காட்டினார்.
அப்போதுதான் அக்சய் தாத்திரேவை ரசிகர்கள் முதல் முறையாக கண்டனர். பார்ப்பதற்கு அப்படியே ஸ்ரேயாஸ் ஐயர் போலவே இருக்கிறார் என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
இதையும் படிங்க: ஐசிசி உலக கோப்பை 2023 - பட்டையை கிளப்பவுள்ள 5 வேகப்பந்துவீச்சாளர்கள் இவர்கள்தான்!
மேலும் பலரும் ஸ்ரேயாஸ் ஐயர் தான் உலகக் கோப்பை அணிகள் இருக்கிறாரே அவர் எப்படி நடுவராக மாறினார் என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.
மேலும் சில ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் வீரராகவும் இருந்து நடுவராகவும் செயல்படுகிறார். ஒரே நபர் இரண்டு வேலையை செய்யப் போகிறார் என்று பலரும் கிண்டல் அடித்து வருகிறார்கள்.
இதனால் ஒரே இரவில் அந்த நடுவர் பிரபலமானார். அக்சய தாத்திரே இந்தியாவின் போட்டிக்கு நடுவராக செயல்பட்டால் அப்போதுதான் இருக்கிறது கச்சேரி.
நேற்று பாபர் அசாம் தனது முதல் போட்டியில் இந்தியாவின் விளையாடினார். ஆனால் அனைவரின் கவனத்தையும் இந்த அக்சய் தாத்திரே என்ற நடுவர்தான் ஈர்த்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |