முகமது சமியை நீக்கியதால் கம்பீருக்கு ஆப்பு வைத்த கங்குலி... கில்லுக்கு ஏற்பட்ட சிக்கல்!
இந்திய அணியில் நட்சத்திர வீரரான முகமது சமி (சமி) சேர்க்கப்படவில்லை. பெங்கால் அணிக்காக விளையாடி வரும் சமி, தனது திறமையை நிரூபித்த பின்பும் அவருக்கு கம்பீர் வாய்ப்பு வழங்கவில்லை.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் தொடங்குகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக மாறும். இதற்காக இந்திய அணி தற்போது கொல்கத்தாவில் முகாமிட்டு தீவிர பயிற்சி செய்து வருகிறது.
இந்திய அணியில் நட்சத்திர வீரரான முகமது சமி (சமி) சேர்க்கப்படவில்லை. பெங்கால் அணிக்காக விளையாடி வரும் சமி, தனது திறமையை நிரூபித்த பின்பும் அவருக்கு கம்பீர் வாய்ப்பு வழங்கவில்லை.
இது குறித்து ஏற்கனவே பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஆன கங்குலி, தனது உடல் தகுதியை நிரூபித்த பின்னரும் சமியை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், சமி தேர்வு செய்யப்படாததற்கு மறைமுக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கங்குலி ஒரு பெரிய "ஆப்பை" வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக, சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் போட்டிகளில், இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தான் அமைக்கப்படும். ஆனால், முகமது சமி சேர்க்கப்படாததால், கங்குலி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆடுகளத்தை வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைத்திருக்கிறார்.
கங்குலியின் அறிவுறுத்தலின்படி பெங்கால் கிரிக்கெட் சங்கம் தயாரித்த இந்த ஆடுகளமானது, பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தால் விக்கெட்டுகள் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரிவர்ஸ் ஸ்விங் கலையைச் சிறப்பாகச் செய்வதில் முகமது சமி வல்லவர். தற்போது இருக்கும் அணியில் ஷமியின் அளவிற்கு இந்தப் கலையில் கைதேர்ந்தவர்கள் பெரிய அளவில் யாரும் இல்லை. சிராஜ் மற்றும் பும்ரா ஒரு அளவுக்கு ரிவர்ஸ் ஸ்விங் செய்தாலும், ஷமி அளவுக்கு அவர்கள் கைதேர்ந்தவர்கள் கிடையாது.
இந்திய அணி நிர்வாகம் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களையும், மூன்று சுழற் பந்துவீச்சாளர்களையும் தேர்வு செய்யலாம் என்று திட்டமிட்ட நிலையில், ஆடுகளத்தைப் பார்த்தவுடன் கம்பீரும், கேப்டன் கில்லும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். முகமது ஷமியைச் சேர்க்காததாலேயே கங்குலி இப்படி ஒரு ஆப்பை தயார் செய்து விட்டதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும், கங்குலி ஏற்கெனவே இது குறித்து விளக்கம் அளித்தபோது, ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் தங்களைக் கேட்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
