சுயநலமாக முடிவெடுத்த ரோஹித்... இந்திய அணியில், அதிரடி மாற்றம்... ரசிகர்கள் அதிருப்தி!
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட்போட்டியில் ரோஹித் சர்மா, சுயநலமாக முடிவெடுத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
                                இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட்போட்டி, மெல்போர்னில் துவங்கி நடைபெற்று வருவதுடன், இந்திய அணியில், அதிரடி மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
ஷுப்மன் கில்லை நீக்கிவிட்டு, ஒன்டவுன் இடத்தில் கே.எல்.ராகுலை விளையாட வைக்க உள்ளதுடன், மிடில் வரிசையில் கூடுதலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுல், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோர் தான் ஓபனர்களாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியில், கே.எல்.ராகுலின் இடத்தில் கேப்டன் ரோஹித்தும், கே.எல்.ராகுல் ஒன்டவுன் இடத்தில் களமிறங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின், டாப் ஆர்டரில் பார்மில் இருக்கும் ஒரேயொரு பேட்டர் கே.எல்.ராகுல் தான். இந்நிலையில், அவரது இடத்தை, மாற்றியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
ரோஹித் சர்மா, இந்த ஒரு வருடமாக, டெஸ்டில் பார்ம் அவுட்டில் இருக்கிறார். தற்போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது, மூன்றாவது டெஸ்டிலும், பந்தை பேட்டின் தடுப்பகுதியில் வாங்க முடியாமல், எட்ஜ் ஆகி ஆட்டமிழந்துவிடுகிறார்.
இப்படி பார்ம் அவுட்டில் இருக்கும் நிலையில், வழக்கம்போல மிடில் வரிசையிலேயே ஆடாமல், ஓபனராக களமிறங்கினால், மீண்டும் பார்முக்கு திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையில், டாப் ஆர்டரில் பார்மில் இருக்கும் ஒரேயொரு பேட்டரான ராகுலின் இடத்தை மாற்றியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 
இதனால், நான்காவது டெஸ்ட் போட்டியில், கேப்டன் ரோஹித் சர்மா, பெரிய ஸ்கோரை அடித்து, தனது பார்மை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ஒருவேளை, ஓபனராக களமிறங்கி, ரோஹித் சர்மா இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒரு அரை சதத்தை கூட அடிக்கவில்லை என்றால், தோல்வியடையும் பட்சத்தில், முழு பொறுப்பையும் ரோஹித் சர்மா ஏற்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஆகையால், நான்காவது டெஸ்ட் போட்டியில், ரோஹித் சர்மா பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்திய அணியானது, கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், வென்றால் மட்டுமே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு நேரடியாக முன்னேற முடியும்.
ஒருவேளை, ஒரு போட்டியில் தோற்றாலும், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் அடுத்த டெஸ்ட் தொடரின் வெற்றி, தோல்விகளை பொறுத்துதான் இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு இருக்கும்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






