புகைப்படம் வெளியிட்டு ரகசியத்தை உடைத்த புது குணசேகரன்.. இனி கதை இதுதானா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் புது குணசேகரன் ஆக நடிகர் வேலராமமூர்த்தி அறிமுகம் ஆகி இருக்கிறார்.

புகைப்படம் வெளியிட்டு ரகசியத்தை உடைத்த புது குணசேகரன்.. இனி கதை இதுதானா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் புது குணசேகரன் ஆக நடிகர் வேலராமமூர்த்தி அறிமுகம் ஆகி இருக்கிறார்.

அவர் இப்போது ஒரு சில நாட்களாகவே சீரியலில் வராமல் இருக்கிறார். இந்த நிலையில் தான் தற்போது எங்கே இருக்கிறேன் என்பதை பற்றி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதே நேரத்தில் சீரியலில் அடுத்தடுத்த உண்மைகள் வெளிவருகிறது. அதனால் இனி இதுதான் நடக்கப் போகிறது என்று எதிர்பார்க்க வைத்திருக்கிறது. அது பற்றி பார்ப்போம்

அந்த வகையில் ஆதி குணசேகரன் ஆக நடித்து வந்த மாரி முத்துவின் மறைவிற்குப் பிறகு சீரியலில் பல அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. 
ஏற்கனவே நடித்து வந்த மாரிமுத்துவின் இழப்பு பலருக்கும் மனதில் இருக்கும் நிலையில் அவரைப் போலவே ஒருவரை நடிக்க வைத்தால் கதையில் அவர் சீக்கிரமாக ஒட்டி விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். 

அதேபோலவே நடிகர் வேல ராமமூர்த்தியை ஆதி குணசேகரனாக சீரியல் தரப்பினர் நடிக்க வைத்திருந்தனர். ஆனால் அவர் மாரி முத்துவின் ஸ்டைலை பின்பற்றாமல் தன்னுடைய கேரக்டரிலே நடிக்கிறார். 

தன்னுடைய தனித்துவத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக முயற்சியை எடுத்து இருக்கிறார். முதல் இரண்டு நாட்களிலேயே அவருடைய காட்சிகள் மிரட்டலாக இருந்தது. அது குறித்து அதிகமான சமூக வலைத்தளத்தில் கருத்துக்களும் குவிந்து வருகிறது.

ஆனாலும் இதை போக போக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது பல சீரியல்களில் நிரூபணம் ஆனது தான். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் வந்த முதல் நாளே போலீஸ் ஆபீசர்களை அடித்து விட்டு குணசேகரன் பிரச்சனை செய்து இருந்தார். 

இந்த நிலையில் அதை காரணம் காட்டி இப்போது அவர் ஜெயிலில் இருப்பது போன்று கதையை கொண்டு போயிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த ரகசியத்தை உடைக்கும் வகையில் வேலராமமூர்த்தி தான் பாரிஸில் இருக்கும் புகைப்படங்களை தினமும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். 

அங்கே தன் நண்பர்களோடு எடுக்கும் புகைப்படங்களும், பாரிஸின் அழகையும் அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

அதனால் வேலராமமூர்த்தி ஏற்கனவே சொன்னது போல அவருக்கு கால் சீட் பிரச்சனை. அதனால்தான் அவர் சீரியலில் இருந்து இப்போது அவர் நடித்து வந்த சினிமாவிற்கு போயிருக்கிறார். 

ஆனால் சீக்கிரமாக அனைத்து திரைப்பட சூட்டிங்கிலும் நடித்துவிட்டு சீக்கிரமாக சீரியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியை விடவும் வில்லனாக இருக்கும் ஆதி குணசேகரனுக்கு தான் காட்சிகள் இருக்கும்.

தினமும் அவர் இல்லாத காட்சிகளே இல்லை என்று சொல்லும் வகையில் தான் அதிகமான காட்சிகள் இருந்தது இந்த நிலையில் இப்போது குணசேகரன் இல்லை என்றாலும் காட்சிகள் இருக்கு என்று சொல்கிற மாதிரி கதை மாற்றப்பட்டிருக்கிறது. 

அதாவது ஜீவானந்தத்திற்கு தன் மனைவி கயல்விழியை கொலை செய்தது குணசேகர் தான் என்பது தெரியாது. இந்த நிலையில் இப்போது இன்று வெளியான ப்ரோமோவில் என்னுடைய புருஷன் குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும்தான் உங்க மனைவியை கொலை செய்தது என்ற ரகசியத்தை ஈஸ்வரி ஜீவானந்தரிடம் சொல்லி விடுகிறார். 

அதே நேரத்தில் ஜீவானந்தம் பங்க்ஷனுக்கு வரவேண்டும் அப்போது ஜீவானந்தத்தையும் அப்பத்தாவையும் போட்டு தள்ள வேண்டும் என்று கதிர் ப்ளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை சீரியல் தரப்பினர்கள் வேகமாக ரசிகர்களின் மனதில் பற்றி எரிய வைத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் கோவில் திருவிழாவில் கதிரால் அப்பத்தாவுக்கு ஏதோ நடக்கப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது. அது போல தான் அப்பத்தாவும் தன் வீட்டு மருமகளிடம் என்னால் இனி எதுவுமே உங்களுக்கு சொல்லித் தர முடியாது.

நீங்களாகத்தான் எல்லாமே முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதே போல நந்தினி ஆரம்பத்திலேயே மாரிமுத்து இருக்கும்போது கதிரை யாராவது அடிக்க வேண்டும் என்று சொன்னது போலவே ஜீவானந்தம் ஆபீசில் வைத்து பர்ஹானா கதிரை அடித்திருந்தார். அதுபோல இப்போது கதிர் கைகால்களை யாராவது உடைத்து போட வேண்டும் என்று நந்தினி கூறி இருக்கிறார்.

அதுபோல சக்தியும் கை, கால்களை நான் உடைத்து போட்டு விடுவேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் இனி வரும் கோவில் திருவிழாவில் கதிருக்கு ஏதாவது நடக்கப் போகிறது என்பதை இப்படி முன்கூட்டியே சொல்கிறார்களா? என்றும் யோசிக்க வைக்கிறது. அதே நேரத்தில் கிள்ளிவளவனை எதற்காக கதிர் பார்க்க வேண்டும் என்ற சந்தேகம் ஞானத்திற்கு அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் ஜீவனந்தத்தின் மனைவியை கொலை செய்தது கதிர் மற்றும் குணசேகரன் தான் என்ற ரகசியம் ஞானத்திற்கு தெரிய வரும்போது ஞானம் யார் பக்கம் நிற்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பும் அதுபோல தன்னுடைய மகன்கள் கொலைகாரங்கள் என்ற தெரியபோது விசாலாட்சி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...