சென்னை மற்றும் ஹைதராபாத் போட்டி நடப்பதில் சிக்கல்? இருட்டில் மூழ்கிய மைதானம்.. அவசர ஆலோசனை! 

இரு ஆண்டுகளுக்கு பாதி தொகையை செலுத்தியதுடன், இன்னும் 1.63 கோடி பாக்கி உள்ளது.

சென்னை மற்றும் ஹைதராபாத் போட்டி நடப்பதில் சிக்கல்? இருட்டில் மூழ்கிய மைதானம்.. அவசர ஆலோசனை! 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம் இருட்டில் மூழ்கி இருப்பதால், போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளாக மின் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய தொகையில் ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பு பாக்கி வைத்து இருந்தது. 

இரு ஆண்டுகளுக்கு பாதி தொகையை செலுத்தியதுடன், இன்னும் 1.63 கோடி பாக்கி உள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் போட்டி இன்று நடக்க இருக்கும் நிலையில் நேற்று அந்த மைதானத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இரு அணி வீரர்களும் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் ஹைதரபாத் கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள் அவசர அவசரமாக மின் வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்படி, இன்னும் ஒரு நாள் அவகாசம் அளிக்குமாறும்,  பணத்தை செலுத்தி விடுவதாகக் கூறி இருக்கின்றனர்.

இதனையடுத்து, மைதானத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டதாக ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பு அதிகாரி ஒருவர் சொல்லி இருக்கிறார். 
எனினும்,  இனி வரும் ஐபிஎல் போட்டிகளுக்கு இதே போன்ற சிக்கல் எழும் என்பதால் பாக்கி தொகையை செலுத்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...