அஸ்வினை விட போவதில்லை.. சிஎஸ்கே மெகா டிவிஸ்ட்.. அஸ்வின் பிடிவாதம்... நடந்தது என்ன?
அஸ்வினுக்கு கடந்த ஐபிஎல் சீசன் எதிர்பார்த்தது போல் இல்லை என்பதுடன், 9 போட்டியில் விளையாடிய அவர் வெறும் ஏழு விக்கெட்டுகளை தான் கைப்பற்றி இருந்ததால் அஸ்வினை சிஎஸ்கே அணி வெளியேற்றிவிடும் என்று பேசப்பட்டது.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து, சிஎஸ்கே அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு வாங்கி இருந்த நிலையில், ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் அஸ்வின் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
அஸ்வினுக்கு கடந்த ஐபிஎல் சீசன் எதிர்பார்த்தது போல் இல்லை என்பதுடன், 9 போட்டியில் விளையாடிய அவர் வெறும் ஏழு விக்கெட்டுகளை தான் கைப்பற்றி இருந்ததால் அஸ்வினை சிஎஸ்கே அணி வெளியேற்றிவிடும் என்று பேசப்பட்டது.
ஆனால், அஸ்வின் ஒரு ஜாம்பவான் என்பதால் அவருக்கு உரிய மரியாதையை சிஎஸ்கே எப்போதுமே கொடுக்கும் என அந்த அணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகத்தான் சிஎஸ்கே கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக அஸ்வின் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அத்துடன், அஸ்வின் தான் சிஎஸ்கே நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கடந்த சீசன்களில் சரியாக விளையாடவில்லை என்றும், 14 போட்டிகளிலும் தான் விளையாடவில்லை என்பதால் சிஎஸ்கே அணியில் என்னுடைய பொறுப்பு என்ன? இல்லாவிட்டால் அணியை விட்டு என்னை நீக்கி கொள்கிறீர்களா என்று அஸ்வினை கேட்டிருக்கிறார்.
இதனை அடுத்து சிஎஸ்கே தரப்பு, அஸ்வினை விடுவிக்கும் முடிவில் அணி நிர்வாகம் இல்லை என்றும் ஒரு வீரராக இல்லை என்றாலும் முக்கிய நிர்வாகியாக பணியில் அமர்த்தும் விருப்பத்துடன் உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
அதற்கு அஸ்வின் தம்மால் இன்னும் சில காலம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும் என்றும் அதன் பிறகு தான் கிரிக்கெட்டை தாண்டிய பொறுப்புகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.
தன்னை விடுவித்து விடுங்கள் என்ற அஸ்வினின் கோரிக்கைக்கு சிஎஸ்கே நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தொடர்ந்து அவரை அணியிலே தொடர வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
