திருமண கோலத்தில் இளம்பெண் சடலமாக கண்டெடுப்பு; அருகே இளைஞர் உடல் – மர்ம மரணத்தால் பரபரப்பு

முஸ்கான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதும், யாசூல் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமண கோலத்தில் இளம்பெண் சடலமாக கண்டெடுப்பு; அருகே இளைஞர் உடல் – மர்ம மரணத்தால் பரபரப்பு

கிராமப்புற பகுதியில் நிகழ்ந்த இரட்டை மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டி கும்ஹாரா கிராமத்தைச் சேர்ந்த யாசூல் (வயது 20) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த முஸ்கான் (வயது 18) ஆகிய இருவரும், அங்குள்ள கைவிடப்பட்ட வீட்டின் அருகே இருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில், இளம்பெண் முஸ்கான் திருமண கோலத்தில் இருந்தது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. முஸ்கான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதும், யாசூல் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், இருவரும் காதலித்து வந்தார்களா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இந்த விவகாரத்தை இருவரின் குடும்பத்தினரும் மறுத்துள்ளனர்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த மரணங்கள் தற்கொலையா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை அறிய, போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தையும், பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.