ஹர்திக் பதவிக்கு ஆப்பு.. புது வீரரை களத்தில் இறக்கிய ரோஹித்... என்ன செய்ய போகிறார் பாண்டியா?
வேகப் பந்து வீச்சு மற்றும் சிறந்த துடுப்பாட்டம் காரணமாகவே இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக ஹர்திக் பாண்டியா வலம் வந்தார்.
வேகப் பந்து வீச்சு மற்றும் சிறந்த துடுப்பாட்டம் காரணமாகவே இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக ஹர்திக் பாண்டியா வலம் வந்தார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு இணையான வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் இதுவரை இந்திய அணிக்கு சரியாக அமையவில்லை. அதனால், எத்தனை முறை ஹர்திக் பாண்டியா காயத்தில் சிக்கினாலும் உடல்நிலை சரியானவுடன் அணியில் இணைக்கப்பட்டு விடுவார்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு, ஹர்திக் பாண்டியா அண்மையில் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த விவகாரங்களால் ரோஹித் - மற்றும் ரோஹித் சர்மா இடையியே மனகசப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு பேச்சு உள்ளது.
இந்த நிலையில், இந்திய டி20 அணியில் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டரான சிவம் துபேவை ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் முக்கிய வீரராக ரோஹித் சர்மா பயன்படுத்தி வருகிறார்.
முதல் இரண்டு டி20 போட்டிகளில் சிவம் துபே தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு 60 மற்றும் 63 ரன்கள் குவித்தார். இரண்டு போட்டிகளிலும் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இதனால், ஹர்திக் பாண்டியா காயத்தில் சிக்கினால், சிவம் துபே அணியில் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகின்றது. இது ஹர்திக் பாண்டியாவுக்கு ரோஹித் சர்மா கொடுத்த முதல் பதிலடியாக பார்க்கப்படுகிறது.
இனி வரும் காலங்களில் ஹர்திக் பாண்டியா தனக்கு காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிவம் துபே நேரடியாக பாண்டியாவை அணியை விட்டு நீக்கும் அளவுக்கு எல்லாம் செல்ல முடியாது.
எனினும், இது ஒரு வகையில் ஹர்திக் பாண்டியாவுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்று பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |