புள்ளிப் பட்டியலில் மிரளவைத்த இந்திய அணி  – பாகிஸ்தான் எல்லாம் பக்கத்திலேயே வர முடியாது!

2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தங்களின் முதல் போட்டிகளில் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்கியுள்ளன.

புள்ளிப் பட்டியலில் மிரளவைத்த இந்திய அணி  – பாகிஸ்தான் எல்லாம் பக்கத்திலேயே வர முடியாது!

2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தங்களின் முதல் போட்டிகளில் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்கியுள்ளன. இருப்பினும், புள்ளிப் பட்டியலில் இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் இருந்தாலும், இந்திய அணி நெட் ரன் ரேட்டில் (NRR) பாகிஸ்தானை விட இரு மடங்குக்கும் அதிகமாக முன்னேறி முதலிடத்தில் உள்ளது. இது வரவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு முன்பாகவே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுமே தங்களின் முதல் போட்டிகளைப் பலவீனமான அணிகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகளுக்கு எதிராகவே விளையாடின. பாகிஸ்தான் அணி ஓமனை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, +4.650 என்ற வலுவான நெட் ரன் ரேட்டைப் பெற்றது. ஆனால், இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை துவம்சம் செய்து இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இதன் காரணமாக, இந்தியாவின் நெட் ரன் ரேட் +10.483 ஆக உயர்ந்துள்ளது, இது பாகிஸ்தானை விட இரு மடங்குக்கும் அதிகமாகும்.

குரூப் சுற்றுப் போட்டிகளில் இந்த அதிகபட்ச நெட் ரன் ரேட் மிகவும் முக்கியமானதாகும். ஒருவேளை மழை காரணமாகப் போட்டி கைவிடப்பட்டாலோ அல்லது அணிகள் சமமான புள்ளிகளுடன் முடித்தாலோ, நெட் ரன் ரேட் அடிப்படையிலேயே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் அணிகள் தீர்மானிக்கப்படும். அந்த வகையில், இந்தியா தனது முதல் போட்டியிலேயே சூப்பர் ஃபோர் சுற்றுக்கான தனது வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

செப்டம்பர் 14 அன்று நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் முடிவு குரூப் ஏ-வின் தலையெழுத்தையே மாற்றும். இந்தியா வென்றால் இந்திய அணி 4 புள்ளிகளுடன் குரூப்வில் முதலிடத்தை உறுதி செய்து, சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முதல் அணியாக (A1) தகுதி பெறும். பாகிஸ்தான் அணி, தனது கடைசிப் போட்டியில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடிக்கப் போராட வேண்டியிருக்கும்.

பாகிஸ்தான் வென்றால் பாகிஸ்தான் அணி தலா 4 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட சூப்பர் ஃபோர் இடத்தை உறுதி செய்யும். இருப்பினும், குரூப் சுற்றில் முதலிடத்தைப் பிடிப்பது யார் என்பதை மற்ற போட்டிகளின் முடிவுகளும், நெட் ரன் ரேட்டும் தீர்மானிக்கும். அந்த வகையில் இந்தியாவின் அதிக நெட் ரன் ரேட் சாதகமான விஷயமாக உள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியைச் சுற்றியுள்ள பரபரப்பு அதிகமாக உள்ளது, ரசிகர்கள் "இந்தியாவை இழிவுபடுத்திய பாகிஸ்தான் வீரர்களுடன் ஆடுவீர்களா?" என்று கொந்தளிப்பது போன்ற கருத்துகளும் வெளியாகியுள்ளன.