என் அலுவலகத்தில் தினமும் மதிய உணவு... விஜயகாந்த் வழியை பின்பற்றப் போவதாக புகழ் அறிவிப்பு

விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று திரை பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

என் அலுவலகத்தில் தினமும் மதிய உணவு... விஜயகாந்த் வழியை பின்பற்றப் போவதாக புகழ் அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிசம்பர் மாதம் 28ம் தேதி மறைந்தார். 

விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று திரை பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

அந்த வகையில் நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் குக் வித் கோமாளி விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நான் ஐயாவின் இறப்புக்கு வந்திருந்தேன். கேப்டன் ஐயா எவ்வளவு உதவி செய்திருக்காங்கன்னு எல்லாரும் சொல்லி இருக்காங்க. அதெல்லாம் நிறைய கேட்டு இருக்கேன். 

நான் சென்னைக்கு வந்த புதுசுல பக்கோடா, வாட்டர் பாக்கெட் இதுதான் எனக்கு சாப்பாடு. நானும், கஷ்டப்பட்டு இருக்கேன். ஐயா பசின்னு வந்த எல்லாருக்கும் வயிறார சாப்பாடு போட்டு இருக்காரு. அதனால் இன்றிலிருந்து (நேற்று) மதியம் பசின்னு வந்தவர்களுக்கு சாப்பாடு போடப்போறேன். 

கேகே நகரில் உள்ள எனது அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு தினமும் சாப்பாடு போடப்போறேன். பசின்னு  இருக்கற யார் வேண்டுமானாலும் அங்கு வந்து சாப்பிடலாம். 
 
கேப்டன் ஐயாவுக்கு நான் செய்யப்போகிறது இது மட்டும் தான். யாருக்காவது பசி இருந்தால் எனது அலுவலகத்திற்கு வரலாம். அதற்காக அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தேன். 

நான் இருக்கும் வரை எனது அலுவலகத்தில் பசித்தோருக்கு சாப்பாடு போடப்படும். எனக்கு பிறகு அடுத்து இருப்பவர்கள் அதை பின்பற்றுவார்கள். நீங்களும் உங்களுக்கு தெரிந்த யாராவது பசியில் இருப்பதை உணர்ந்தால் அவர்களுக்காக சாப்பாடு வாங்கி கொடுங்கள்” என்றார். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...