கிங் கோலியையே மிரளவைத்த பந்து வீச்சாளர்கள்... அவரே சொன்ன பட்டியல்! ஆனால் பும்ரா இல்லை!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்திய அணிக்காக 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்திய அணிக்காக 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார்.
அத்துடன், இந்திய அணிக்காக 82 சதங்களை அடித்து அசத்தி உள்ளதுடன், சீனியர் வீரரான கோலி கடந்த டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப்பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
அத்துடன், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலி, ஐ.பி.எல். தொடரிலும் ஆடி வருகிறார். பெங்களூரு அணிக்காக மட்டுமே ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் விராட் கோலி, இதுவரை 262 போட்டிகளில் 8447 ரன்கள் குவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களால் 'கிங்' கோலி என செல்லமாக அழைக்கப்படும் விராட் கோலி, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஐ.சி.சி. தரவரிசையில் முதல் இடம் வகித்த ஒரே வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
இந்தநிலையில், சமீபத்தில் விராட் கோலி அளித்த பேட்டி ஒன்றில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பேட்டிங் செய்வதற்கு கடினமான பந்துவீச்சாளர்கள் தொடர்பில் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் என்றும், ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கையின் லசித் மலிங்க மற்றும் இங்கிலாந்தின் ஆதில் ரஷீத் ஆகியோரின் பந்துவீச்சில் தான் விளையாட சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சுனில் நரைனின் பந்துவீச்சில் விளையாட சிரமப்பட்டதாகவும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.