யார் இந்த தீர்மானத்தை எடுத்தது?...  இந்திய அணியில் தவறு நடக்கின்றது.... கவாஸ்கர் விளாசல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து பலரும் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டனர்.

யார் இந்த தீர்மானத்தை எடுத்தது?...  இந்திய அணியில் தவறு நடக்கின்றது.... கவாஸ்கர் விளாசல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து பலரும் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டனர்.

நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால், இந்த விடயத்தை பலரும் மறந்து விட்டனர். இந்த நிலையில், பும்ராவுக்கு ஓய்வு கொடுத்தது ஏன் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனத்தை முன் வைத்து உள்ளார்.

மூன்றாவது போட்டியில் வெறும் 23 ஓவர்கள் பந்து வீசிய பும்ராவுக்கு எதற்காக ஓய்வு வழங்கப்பட்டது என, கேள்வி எழுப்பி  மிட் டே தளத்தில் கவாஸ்கர் கட்டுரை எழுதி உள்ளார்.

அதில்,  "மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 15 ஓவர்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 8 ஓவர்களும் மட்டுமே வீசிய பும்ராவுக்கு, ராஞ்சியில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கும் இடையே 9 நாட்கள் இடைவெளி இருந்ததை மறந்து விடாதீர்கள்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்திய அணிக்கு புதிய கேப்டன்... ஆனால் ஹர்திக் கிடையாதாம்... அஜித் அகார்கர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

 "அத்தனை நாள் இடைவெளி இருந்தும் 23 ஓவர்கள் மட்டுமே வீசுவது சோர்வாகவே இருக்காது. அப்படியென்றால் பும்ராவுக்கு ஏன் ஓய்வு அளிக்கப்பட்டது? உடற்தகுதியுடன் இருக்கும் வீரர்களுக்கு மீண்டு வந்து நாட்டுக்காக ஆட இது போதுமான அவகாசம்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

"நான்காவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தால் கடைசிப் போட்டி தொடரை நிர்ணயிக்கும் போட்டியாக மாறி இருக்கும். அதனால், ஓய்வு முடிவை தேசிய கிரிக்கெட் அகாடமி எடுத்ததோ அல்லது பும்ரா எடுத்தாரோ, அது இந்திய அணியின் நன்மைக்கான முடிவு அல்ல " என சாடி உள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...