இலங்கையின் 10வது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் இன்று
வாக்கு எண்ணும் நிலையங்களில் இரவு 7.15 மணிக்குப் பின்னர் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
                                இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று (14) இடம்பெறுவதுடன், காலை 7.00 மணி ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு அனைத்தும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
8500 இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் 17,140,354 பேர் வாக்களிக்கத் தகுதிப்பெற்றுள்ளனர்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களிக்க உள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 3346 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன.
வாக்கு எண்ணும் நிலையங்களில் இரவு 7.15 மணிக்குப் பின்னர் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனால், உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் ஆணைக்குழு ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை, வாக்காளர் அட்டை பெறப்படாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணத்தை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, வாக்களிப்பதற்காக, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், பொது சேவை ஓய்வு பெற்ற அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை, தேர்தல் ஆணையம் மற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






