தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்; வெளியான தகவல்
உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருவதுடன், இன்று (20) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருவதுடன், இன்று (20) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.
இலங்கையில் இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 713,906 ரூபாயாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் ஒன்று 25,190 ரூபாயாகவும் 24 கரட் தங்கப் பவுண் 201,500 ரூபாயாக உள்ளது.
22 கரட் தங்க கிராம் 23,100 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் 184,750 ரூபாயாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,050 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 176,350 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் .
சென்னையில் இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை சில தினங்கள் குறைந்திருந்த நிலையில், தற்போது அதிகரித்து வருகின்றது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,696 ஆகவும் சவரன், ரூ.53,568 ஆகவும் இருந்து வந்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.4 அதிகரித்து, 6,700 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 32 அதிகரித்து, 53 ஆயிரத்து 600 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த மாதங்களில் 50 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது 55 ஆயிரத்தை நெருங்கி செல்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளதுடன், கிராமுக்கு ரூ.97.10 ஆகவும், கிலோவுக்கு ரூ.97,100 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |