தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்றைய விலை எவ்வளவு?
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகை வாங்க முடியாத நிலையில், தினசரி தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகை வாங்க முடியாத நிலையில், தினசரி தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
உலக நாடுகளிடையே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா விதித்துள்ள வரி காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை கடைசி இரண்டு நாட்களாக குறைந்தது.
நேற்று முன்தினம் (24) தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9,005க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (25) தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.9,005க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.72,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றையே விலையின்படியே விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி இன்று (26) ஒரு கிராம் ரூ.9,005க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.72,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக எந்த மாற்றமும் இன்றி இருந்த வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராம் 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.