கோலியை தூக்கி சாப்பிட்ட சும்மன் கில்லின் சாதனை...  ஒரே போட்டியில் ஓவர்டேக்...  'கிங்' இடம் காலி!

இங்கிலாந்து மண்ணில் முதல் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை சும்மன் கில் பெற்றுள்ளார்.

கோலியை தூக்கி சாப்பிட்ட சும்மன் கில்லின் சாதனை...  ஒரே போட்டியில் ஓவர்டேக்...  'கிங்' இடம் காலி!

இந்தியா, இங்கிலாந்து இடையே 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 587 ரன்களை குவித்தது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

இதன்மூலம் பல்வேறு சாதனைகளை சுப்மன் கில் முறியடித்துள்ளதுடன், இங்கிலாந்து மண்ணில் முதல் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அத்துடன், சேனா நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) இரட்டை சதம் அடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையையும் சுப்மன் கில் படைத்து உள்ளார்.

அதுமட்டுமின்றிவ இங்கிலாந்து மண்ணில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர், இளம் கேப்டனாக இரட்டை சதம் அடித்த 2வது சர்வதேச வீரர் என்பது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை தனதாக்கியுள்ளார்.

இதேவேளை, 'இந்திய கிரிக்கெட்டின் பிரின்ஸ்' என அழைக்கப்படும் சுப்மன் கில், 'கிரிக்கெட்டின் கிங்' என அழைக்கப்படும் கோலியின் பல்வேறு சாதனைகளை தகர்த்தெறிந்துள்ளார்.

இரட்டை சதம் விளாசிய கில்... திடீரென்று இப்படி மாறியது எப்படி? அவரே சொன்ன ரகசியம் இதுதான்!

இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் 138 இன்னிங்ஸ்களில் 16 சதங்களை அடித்திருந்தனர். 

சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் ஏழு சதங்களை அடித்துள்ளார். அதே நேரத்தில் 8 சதங்கள் ஒருநாள் போட்டிகளில் வந்துள்ளன. டி20 போட்டிகளிலும் ஒரு சதம் அடித்துள்ளார். 

கோலியை பொறுத்தவரை இந்த கட்டத்தில் அவர் டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்களை மட்டுமே அடித்திருந்தார். மீதமுள்ள 13 சதங்கள் ஒருநாள்க போட்டிகளில் இருந்து வந்தன.

சுப்மன் கில் அதிகபட்சமாக 138 இன்னிங்ஸ்களில் விளையாடிய பிறகு அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் 45.2 சராசரியுடன் 5,515 ரன்களை குவித்துள்ளார். இதுவரை அவர் 6820 பந்துகளை எதிர்கொண்டு 80.86 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்திருந்தார். 

விராட் கோலி இதே கட்டத்தில் அனைத்து வடிவங்களிலும் 138 இன்னிங்ஸ்களில் 45.47 சராசரியுடன் 5,503 ரன்கள் எடுத்திருந்தார். கோலி 7,091 பந்துகளை எதிர்கொண்டு 77.6 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் எடுத்திருந்தார்.

சுப்மன் கில் 138 இன்னிங்ஸ்களில் 113 சிக்ஸர்கள் விளாசி 615 பவுண்டரிகளுடன் சாதனை படைத்துள்ளார். கோலி இதே 138 இன்னிங்ஸ்களில் 35 சிக்சர்கள் மட்டுமே விளாசி 556 பவுண்டரிகளை அடித்திருந்தார். 

சர்வதேச அளவில் 138 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு கில் இதுவரை 7 முறை டக் அவுட்டாகியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 5 முறை டக் அவுட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலா 1 முறை டக் அவுட்டாகியுள்ளார். 

கோலியுடன் ஒப்பிட்டால் அவர் 138 இன்னிங்ஸ்களில் 9 முறை டக் அவுட்டாகி இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் 2 முறை மற்றும் ஒருநாள் போட்டிகளில் 7 முறை டக் அவுட்டாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.