இரட்டை சதம் விளாசிய கில்... திடீரென்று இப்படி மாறியது எப்படி? அவரே சொன்ன ரகசியம் இதுதான்!
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம் அடித்துள்ளார். அதில் ஒரு இரட்டை சதம் மற்றும் பேட்டிங் சராசரி 40 என்று அளவில் உள்ளது.

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 269 ரன்கள் குவித்து, இங்கிலாந்து மண்ணில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த இந்திய டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்று உள்ளார்.
இந்த தொடருக்கு முன்பு வரை கில் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி உள்ளதுடன், இவ்வாறு டெஸ்ட் சதம் அடித்தது கிடையாது. இதேபோன்று இந்த தொடருக்கு முன்பு கில்லின் சராசரி 38 அளவில் இருந்தது.
ஆனால், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம் அடித்துள்ளார். அதில் ஒரு இரட்டை சதம் மற்றும் பேட்டிங் சராசரி 40 என்று அளவில் உள்ளது.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் திடீரென்று இப்படி மாறியது எப்படி என்பது குறித்து பேசிய கில், இங்கிலாந்து தொடருக்கு முன்பு ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தான் பேட்டிங்கில் சில விஷயத்தில் கவனம் செலுத்தி சில மாற்றங்களை செய்ததாக கூறி உள்ளார்.
அந்த மாற்றங்களுக்கான முடிவுகளை தான் தற்போது பார்த்து வருவதாகவும், தற்போது வரை தனக்கு அனைத்தும் சாதகமாக தான் மாறி இருக்கின்றது என்றும், கடந்த இரண்டு நாட்களாக நான் எந்த ஒரு கேட்ச் பயிற்சியும் எடுக்கவில்லை என குறிப்பிட்டு உள்ளார்.
ஏனென்றால் தான் தொடர்ந்து பேட்டிங் செய்து கொண்டு இருந்த நிலையில், தற்போது ஸ்லீப்பில் நின்றவுடன் நான் பிடித்த கேட்ச் தனக்கு திருப்தியை அளித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டெஸ்ட் கிரிக்கெட்டில் பில்டிங் என்பது மிகவும் முக்கியம். பில்டிங் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொரு வீரர்களும் அறிந்திருக்கின்றோம். இரண்டாவது போட்டியில் செயல்பட்டதை போல் முதல் டெஸ்ட் போட்டியில் பாதியளவு செயல்பட்டு இருந்தால் கூட முடிவுகள் வேறு மாதிரி அமைந்திருக்கும் என்று சுப்மன் கில் சுட்டிக்காட்டியுள்ளார்.