இவர்தான் தோல்விக்கு காரணம்... ரோஹித் அதிருப்தி.. அடுத்து என்ன சொன்னார் தெரியுமா?
இந்தியா, ஆஸ்திரேலியா இடைலியான நான்காவது டெஸ்ட் போட்டியின், மூன்றாவது இன்னிங்ஸ் துவக்கத்தில், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருந்தது.
 
                                இந்தியா, ஆஸ்திரேலியா இடைலியான நான்காவது டெஸ்ட் போட்டியின், மூன்றாவது இன்னிங்ஸ் துவக்கத்தில், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருந்தது.
இந்நிலையில், ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கு சாதகமாக போட்டி மாற துவங்கிய சமயத்தில், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 3 முறை கேட்சை தவறவிட்டு சொதப்பினார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திய லபுஷேன் 70 (139) ரன்களை எடுத்து அசத்தினார். மேலும், இறுதிக் கட்டத்தில், நாதன் லைனின் 41 (90) ரன்களும் மிகமுக்கியமானதாக மாறியது.
இந்த இரண்டு விஷயங்களாலும், இரண்டு இன்னிங்ஸ்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 100+ ரன்கள் முன்னிலை வகித்ததாலும், இந்திய அணிக்கு, 340 ரன்களை, ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயம் செய்தது.
மெகா இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில், ஓபனர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 84 (208) மட்டுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். மேலும், ரிஷப் பந்தை 30 (104) தவிர மற்ற எந்த பேட்டர்களும், இரட்டை இலக்க ரன்களை தொடவில்லை.
 
இறுதியில், இந்திய அணி 155/10 ரன்களை மட்டும் சேர்த்து, 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இப்போட்டி முடிந்தப் பிறகு ரோஹித் சர்மா பேசினார்.
அப்போது, ‘‘வருத்தமாக இருக்கிறது. கடைசிவரை போராடினோம். எங்களுக்கு அருமையாக வாய்ப்பு இருந்தது. ஆஸ்திரேலிய அணி 90/6 என இருந்தபோது, லபுஷேன் கேட்சை தவறவிட்டோம். இதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது’’ எனக் கூறினார்.
மேலும் பேசிய ரோஹித் சர்மா, ‘‘ஒரு குறிப்பிட்ட வீரரை தோல்விக்கான முழு காரணமாக சொல்ல முடியாது. குழுவாக செயல்பட்டோம். குழுவாகவே தோல்வியை ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம். கடைசி இரண்டு செஷன்களில் பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாகதான் இருந்தது.
இருப்பினும், ஆஸ்திரேலிய அணியினம் அபாரமாக பந்துவீசி, வெற்றியை தட்டிப்பறித்தனர். நிதிஷ் ரெட்டி, மிகச்சிறப்பாக செயல்பட்டார். இது அவருக்கு முதல் தொடர்தான். இருப்பினும், அனுபவ வீரரைப் போல தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். கடைசி டெஸ்டில் வெற்றியைப் பெற முடிந்த அனைத்தையும் செய்வோம்’’ எனத் தெரிவித்தார். இந்த இரண்டு கேட்ச்களையும் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் தான் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






