கோலி, ரோஹித் இல்லை! புதிய கேப்டன்களுடன் ஆஸ்திரேலிய தொடரில் களமிறங்கும் இளம் படை!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்த அணியில் இடம்பெறவில்லை.

 கோலி, ரோஹித் இல்லை! புதிய கேப்டன்களுடன் ஆஸ்திரேலிய தொடரில் களமிறங்கும் இளம் படை!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்த அணியில் இடம்பெறவில்லை. இத்தொடரில் ரஜத் படிதார் மற்றும் திலக் வர்மா ஆகியோர் வெவ்வேறு போட்டிகளுக்கு இந்திய ஏ அணியின் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா ஏ கிரிக்கெட் அணி தங்கள் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இத்தொடர் செப்டம்பர் 30, அக்டோபர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

விராட், ரோஹித் ஏன் இல்லை? விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்தத் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடப் போவதாகவும், 2027 உலகக் கோப்பையில் விளையாடி ஓய்வு பெற திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. 

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் பிசிசிஐ அவர்களை கழற்றிவிட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், 39, 40 வயதில் 2027 உலகக் கோப்பையில் அவர்களால் நல்ல ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மில் அசத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகும் என்று பேசப்பட்டது.

எனவே, அவர்களைத் தேர்வுக்குழு இப்போதே கழற்றிவிட்டு சுப்மன் கில் தலைமையிலான இளம் அணியை உருவாக்க விரும்புவதாக செய்திகள் தெரிவித்தன. இருப்பினும், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா இந்தச் செய்திகளை மறுத்தார். 

ஆனாலும், 2027 உலகக் கோப்பையில் விளையாட விராட், ரோஹித் உள்ளூரில் விளையாடி தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்வது அவசியம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர். இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஆஸ்திரேலியா ஏ ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்தியா ஏ அணியில் விராட் மற்றும் ரோஹித் ஆகியோருடைய பெயர்கள் இல்லை.

முதல் போட்டிக்கு (செப்டம்பர் 30), ரஜத் படிதார் தலைமையில் 13 பேர் கொண்ட இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 2 போட்டிகளுக்கு, திலக் வர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளுக்கு ரஜத் படிதார் துணை கேப்டனாக இருப்பார்.

முதல் போட்டிக்கான அணி: ரஜத் படிதார் (கேப்டன்), ப்ரப்சிம்ரான் சிங் (கீப்பர்), ரியன் பராக், ஆயுஷ் படோனி, சூர்யானிஷ் ஷேட்ஜ், விப்ராஜ் நிகாம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்நீட் சிங், யுத்விர் சிங், ரவி பிஷ்ணோய், அபிஷேக் போரேல் (கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, சிமர்ஜீட் சிங்.

2 மற்றும் 3வது போட்டிகளுக்கான இந்திய ஏ அணி: திலக் வர்மா (கேப்டன்), ரஜத் படிதான்ர் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, ப்ரப்சிம்ரான் சிங் (கீப்பர்), ரியன் பராக், ஆயுஷ் படோனி, சூர்யானிஷ் ஷேட்ஜ், விப்ராஜ் நிகாம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்நீட் சிங், யுத்விர் சிங், ரவி பிஷ்ணோய், அபிஷேக் போரேல் (கீப்பர்), ஹர்ஷிட் ராணா, அர்ஷிதீப் சிங்.