ஸ்டோக்ஸ் சாதனை முறியடிப்பு... பேட்டை தூக்கி எறிந்த ரிஷப் பண்ட்.. என்ன நடந்தது?

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ரிஷப் பண்ட், எட்டு பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் அடங்கலாக 58 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். 

ஸ்டோக்ஸ் சாதனை முறியடிப்பு... பேட்டை தூக்கி எறிந்த ரிஷப் பண்ட்.. என்ன நடந்தது?

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ரிஷப் பண்ட், எட்டு பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் அடங்கலாக 58 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். 

இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 407 ரன்கள் எடுத்த நிலையில், 180 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக களமிறங்கியது.

இதன்போது, 28 ரன்களின் ஜெய்ஸ்வால்  ஆட்டமிழக்க, கருண் நாயர் 26 ரன்களில் வெளியேற,  ராகுல் 55 ரன்கள் எடுக்க, வழக்கம் போல் தன்னுடைய டி20 கிரிக்கெட்டில் ஸ்டைல் பேட்டிங்கை பண்ட் வெளிப்படுத்தினார். 

இதனால் இந்திய அணியின் ஸ்கோர் கிடு கிடுவென உயர்ந்த சூழலில் இங்கிலாந்து வீரர் டாங்க் வீசிய ஒரு பந்து அபாரமாக விளையாடி ஒரு சிக்சர் அடித்து ஒரு புதிய சாதனையை படைத்தார்.

அதாவது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பண்ட் தனதாக்கி உள்ளார். இதற்கு முன்னதாக, இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் தென் ஆப்பிரிக்காவில் 21 சிக்சர் அடித்திருந்தார். தற்போது ரிஷப் பண்ட் இங்கிலாந்து மண்ணில் 23 சிக்சர்கள் அடித்து உள்ளார்.

இதனிடையே ரிஷப் பன்ட், டாங்க் வீசிய ஓவரின் அடிக்கும் போது பேட்டை விளாசிய நிலையில், பேட் அவருடைய கையை விட்டு நழுவி வெகு தூரம் பறந்து விழுந்தது. இதனை பார்த்து மைதானத்தில் இருந்த பலரும் சிரித்தனர்.

டிரஸிங் ரூமில் அமர்ந்து கொண்டிருந்து பார்த்த பும்ராவும் சிரிக்க, பண்ட் பேட்டை எடுக்க ஓடி வந்தார். அத்துடன், பண்ட் 65 ரன்கள் எடுத்திருந்த போது, சோயிப் பஷிர் வீசிய பந்தை மீண்டும் சிக்சருக்கு அடிக்க முயற்சி செய்ய அப்போது, மீண்டும் பேட் பறந்ததுடன், அவர் அடித்த பந்து கேட்ச் ஆனமை குறிப்பிடத்தக்கது.