டி20 உலகக்கோப்பை  அணியில் 38 வயது தமிழக வீரருக்கு வாய்ப்பு... வெளியான தகவல்!

டி20 உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ள நிலையில் இந்திய டி20 அணியில் இடம் பெறப் போகும் வீரர்கள் தேர்வில் தேர்வுக் குழு மும்முரம் காட்டி வருகின்றது.

டி20 உலகக்கோப்பை  அணியில் 38 வயது தமிழக வீரருக்கு வாய்ப்பு... வெளியான தகவல்!

டி20 உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ள நிலையில் இந்திய டி20 அணியில் இடம் பெறப் போகும் வீரர்கள் தேர்வில் தேர்வுக் குழு மும்முரம் காட்டி வருகின்றது.

அந்த அடிப்படையில் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக்கை இந்திய டி20 அணியில் சேர்க்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

38 வயதாகும் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரைத் தவிர மற்ற நேரங்களில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார் .

2024 ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்கின் ஃபார்ம் மற்ற  இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை விடவும் சிறப்பாக காணப்படுகின்றது.

இதேவேளை, ஜிதேஷ் சர்மா, இஷான் கிஷன், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோரில் இருவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு செல்லக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது அந்த பட்டியலில் தினேஷ் கார்த்திக் பெயரும் சேர்ந்துள்ளதுடன், பட்டியலில் ரிஷப் பண்ட் முதல் இடத்தில் இருக்கிறார். 

அவர் ஓராண்டுக்கு முன் இந்திய டி20 அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக இருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் 158 ஸ்ட்ரைக் ரேட்டில் 194 ரன்கள் எடுத்துள்ளார்.

சஞ்சு சாம்சன் 6 போட்டிகளில் 170 பந்துகளை சந்தித்து 155 ஸ்ட்ரைக் ரேட்டில் 264 ரன்கள் குவித்துள்ளார். ஜிதேஷ் சர்மா மோசமான ஃபார்மில் இருக்கிறார். எனவே, அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம். 

இஷான் கிஷன் நன்றாகவே ஆடினாலும் அவர் கடந்த சில மாதங்களாக பிசிசிஐ அறிவுரையை ஏற்று உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் இருந்ததால் அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பெற வாய்ப்பு கிடைக்கக் கூடும். 
தினேஷ் கார்த்திக் இதுவரை 7 போட்டிகளில் 110 பந்துகளை சந்தித்து 205 ஸ்ட்ரைக் ரேட்டில் 226 ரன்கள் குவித்துள்ளார். மூன்று முறை நாட் அவுட்டாக நின்று இருக்கிறார். 

2024 ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் ஃபினிஷராக கருதப்படும் ரிங்கு சிங் இன்னும் சரியான செயல்பாட்டை வெளிப்படுத்தாத நிலையில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் ஃபினிஷராக இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...